FD : வங்கிகள் எஃப்டி விகிதத்தை குறைத்த போதிலும் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!
Banks Offers Highest Interest Rates For FD Schemes | இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் பல வகையான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த வங்கிகள் சமீபத்தில் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், வங்கிகளும் தங்களது எஃப்டி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன.

நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பாதுகாப்பான திட்டமாக கருதப்படுகிறது. காரணம் இந்த திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுவது மட்டுமன்றி, குறைந்த நிதி இழப்பு அபாயத்தையும் வழங்குகிறது. இதன் காரணமாகவே ஏராளமான பொதுமக்கள் இந்த நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். நிலையான வைப்பு நிதி திட்டங்களை பொருத்தவரை அதிக வட்டி வழங்கக்கூடிய திட்டங்கள் சிறந்தவையாக உள்ளன. இந்த நிலையில் தான், இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) ரெப்போ வட்டி விகிதத்தை குறைந்தது. இதன் எதிரொலியாக நிலையான வைப்பு நிதி திட்டங்களின் வட்டி விகிதங்களை குறைத்து வங்கிகள் உத்தரவிட்டன.
ரெப்போ வட்டி விகித குறைப்பு – எஃப்டி வட்டி விகிதங்களை குறைத்த வங்கிகள்
ரெப்போ வட்டி விகித குறைப்பால் பல வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்திருக்கும் நிலையில், சில வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்தன. இருப்பினும் சில வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்குகின்றன. அது என்ன என்ன வங்கிகள் அவற்றில் எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூத்த குடிமக்களுக்கான எஃப்டி திட்டங்கள் – அதிக வட்டி வழங்கும் வங்கிகள்
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
மற்ற எந்த வங்கிகளை விடவு உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank) நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்குகிறது. அதன்படி, பொது குடிமக்களுக்கு 4 சதவீதம் முதல் 8.25 சதவீதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.5 சதவீதம் முதல் 8.75 சதவீதம் வரையிலும் வட்டி வழங்குகிறது.
பந்தன் வங்கி
பந்தன் வங்கி (Bandhan Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகப்படியாக 8.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
இண்டஸ்லேண்ட் வங்கி
இண்டஸ்இண்ட் வங்கி (IndusInd Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகப்படியாக 8 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஆர்பிஎல் வங்கி
ஆர்பிஎல் வங்கி (RBL Bank) மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு அதிகப்படியாக 8 சதவீதம் வட்டி வழங்குகிறது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.