AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: குஜராத்தை எதிர்கொள்ளும் சென்னை.. பிளேயிங் லெவன் எப்படி..? பிட்ச் நிலவரம்!

CSK vs GT Head To Head: ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணி 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 04 முறையும் குஜராத் டைட்டன்ஸ் 04 முறையும் வென்றுள்ளன. 

IPL 2026: குஜராத்தை எதிர்கொள்ளும் சென்னை.. பிளேயிங் லெவன் எப்படி..? பிட்ச் நிலவரம்!
ருதுராஜ் கெய்க்வாட் Vs சுப்மன் கில்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 26 Apr 2026 08:00 AM IST

இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசனின் (IPL 2026) 37வது போட்டியானது, சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே இன்று அதாவது 2026 ஏப்ரல் 26ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்குத் தொடங்கும். கடந்த ஐபிஎல் 2025 சீசனில் இந்த இரு அணிகளுக்கும் இடையே ஒரே ஒரு போட்டி மட்டுமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 230 ரன்களை வெற்றிகரமாகப் பாதுகாத்து 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், டிவால்ட் பிரெவிஸ் வெறும் 23 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அதிரடியாக அரைசதம் அடித்தார். அதே நேரத்தில், அன்ஷுல் கம்போஜ் 2.3 ஓவர்களில் வெறும் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ALSO READ: சிஎஸ்கே ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோவின் அதிரடி சலுகை

சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம் பிட்ச் ரிப்போர்ட்:

ஐபிஎல் 2026-ன் 37-வது போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்தே வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெற்ற கடந்த 5 டி20 போட்டிகளில் நான்கில், தற்காப்பு ஆட்டத்தில் ஈடுபட்ட அணியே வெற்றி பெற்றுள்ளது. இங்கு நடைபெறும் டி20 சர்வதேசப் போட்டிகளில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் சுமார் 170 ரன்களாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு கடைசியாக நடைபெற்ற டி20 போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. அதில், சொந்த அணியான சிஎஸ்கே, கேகேஆர் அணியை 192 ரன்கள் என்ற இலக்கை தற்காத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணி 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 04 முறையும் குஜராத் டைட்டன்ஸ் 04 முறையும் வென்றுள்ளன.

ALSO READ: 150 ரன்களை எட்டி கெத்து.. பஞ்சாப் அணியை பஞ்சர் செய்த கே.எல்.ராகுல்..!

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளேயிங் லெவன்:

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), சர்பராஸ் கான், டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, கார்த்திக் சர்மா/மகேந்திர சிங் தோனி, ஜேமி ஓவர்டன், நூர் அகமது, அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீத் சிங், முகேஷ் குமார்.

இம்பாக்ட் வீரர்: அகேல் ஹுசைன்.

குஜராத் டைட்டன்ஸ் ப்ளேயிங் லெவன்:

சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ராகுல் தெவாடியா, ஷாருக் கான்/அனுஜ் ராவத், கிளென் பிலிப்ஸ்/ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், ககிசோ ரபாடா, அசோக் குமார், மொஹம்மத்.

இம்பாக்ட் வீரர்: பிரசித் கிருஷ்ணா.

சிஎஸ்கே மற்றும் ஜிடி அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியின் கணிப்பு

ஐபிஎல் 2026 தொடரின் 37வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Follow Us