IPL 2026: 150 ரன்களை எட்டி கெத்து.. பஞ்சாப் அணியை பஞ்சர் செய்த கே.எல்.ராகுல்..!
KL Rahul Century: ஐபிஎல் வரலாற்றில் கே.எல். ராகுலின் ஆறாவது சதம் இதுவாகும். இதன் மூலம், இந்த லீக்கில் அதிக சதங்கள் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்தார். தற்போது, இந்தப் பட்டியலில் விராட் கோலி (8 சதங்கள்) மற்றும் ஜோஸ் பட்லர் (7 சதங்கள்) மட்டுமே அவருக்கு முன்னால் உள்ளனர்.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 47 பந்துகளில் சதம் அடித்து கே.எல். ராகுல் புதிய வரலாறு படைத்தார். இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் தற்போது கே.எல். ராகுல் (KL Rahul) மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்த இன்னிங்ஸின் போது, கே.எல். ராகுல் ஐபிஎல் 2026-க்கான ஆரஞ்சு கேப்பையும் தன்வசமாக்கினார். இதுமட்டுமின்றி கே.எல். ராகுல் தனது ஐபிஎல் வாழ்க்கையில் 5,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். கே.எல்.ராகுலின் 150 மற்றும் நிதிஷ் ராணாவின் 91 ரன்கள் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க சதத்தின் போது 3 முக்கிய சாதனைகளை தகர்த்தார்.
ALSO READ: தோனி திரும்புவது எப்போது..? அப்டேட் கொடுத்த மைக் ஹஸ்ஸி.. குஷியில் ரசிகர்கள்!




3 முக்கிய சாதனைகளை முறியடித்த கே.எல்.ராகுல்:
New Day. New Celebration. Same old classy KL. 💯🎬pic.twitter.com/5xfLKpCOHC
— Delhi Capitals (@DelhiCapitals) April 25, 2026
ஐபிஎல் வரலாற்றில் கே.எல். ராகுலின் ஆறாவது சதம் இதுவாகும். இதன் மூலம், இந்த லீக்கில் அதிக சதங்கள் அடித்த கிறிஸ் கெய்லின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்தார். தற்போது, இந்தப் பட்டியலில் விராட் கோலி (8 சதங்கள்) மற்றும் ஜோஸ் பட்லர் (7 சதங்கள்) மட்டுமே அவருக்கு முன்னால் உள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள்
- 8 சதங்கள் – விராட் கோலி
- 7 சதங்கள் – ஜோஸ் பட்லர்
- 6 சதங்கள் – கே.எல். ராகுல்
- 6 சதங்கள் – கிறிஸ் கெய்ல்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக அதிவேக சதம்:
கே.எல். ராகுல் தனது சதத்தை 47 பந்துகளில் எட்டினார். இந்தியன் பிரீமியர் லீக்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக இதுவே ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிவேக சதமாகும். இதன்மூலம், கே.எல்.ராகுல் முன்னாள் டெல்லி கேப்டன் வீரேந்தர் சேவாக் மற்றும் குயின்டன் டி காக் வைத்திருந்த சாதனையை முறியடித்தார். சேவாக் மற்றும் டி காக் இருவரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக தங்களது சதத்தை 48 பந்துகளில் எட்டியிருந்தனர்.
- 47 பந்துகள் – கே.எல். ராகுல்
- 48 பந்துகள் – வீரேந்தர் சேவாக்
- 48 பந்துகள் – குயின்டன் டி காக்
ALSO READ: ஆர்சிபி டாப் 2.. புள்ளிகள் பட்டியலில் எம்ஐ, எல்எஸ்ஜி, ஜிடி நிலைமை என்ன?
ஐபிஎல்-லில் ஒரு இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:
ஐபிஎல்-லில் ஒரு இந்திய வீரர் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை கே.எல். ராகுல் எட்டியுள்ளார். இதன்மூலம், கே.எல். ராகுல் அபிஷேக் ஷர்மாவின் 141 ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார். மேலும், ஐபிஎல்-லில் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் கே.எல். ராகுல் பெற்றார்.