AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: 7 போட்டிகளில் 6 புள்ளிகள்… சிஎஸ்கே பிளே ஆஃப் தகுதி பெற என்ன செய்ய வேண்டும்..?

CSK Playoff Scenario: 2026 ஏப்ரல் 23ம் தேதி இரவு, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி, மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை அணி 206 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மும்பை அணியை 19 ஓவர்களில் 104 ரன்களுக்குள் சுருட்டியது. ரன்கள் அடிப்படையில் இது மும்பையின் மிகப்பெரிய தோல்வியாகவும், சென்னையின் மிகப்பெரிய வெற்றியாகவும் அமைந்துள்ளது.

IPL 2026: 7 போட்டிகளில் 6 புள்ளிகள்… சிஎஸ்கே பிளே ஆஃப் தகுதி பெற என்ன செய்ய வேண்டும்..?
சென்னை சூப்பர் கிங்ஸ்Image Source: CSK/X
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 24 Apr 2026 16:14 PM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு (Chennai Super Kings) தொடக்கத்தில் சரியாக எதுவும் அமையவில்லை. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்ஷி என அனைத்தும் சொதப்பலாகவே இருந்தது.  ஐபிஎல் 2026 சீசனின் நடுப்பகுதியில், சென்னை அணி மீண்டு எழுந்து டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக 2 வெற்றிகளைப் பதிவு செய்தனர். ஹைதராபாத்திடம் தோற்றபோதிலும், கடைசி நிமிடத்தில் மும்பை போன்ற ஒரு வலுவான அணியை வீழ்த்தி, சென்னை அணி பிளேஆஃப் போட்டிக்குத் திரும்பியுள்ளது.

ALSO READ: MI-CSK போட்டிக்குப் பிறகு புள்ளி அட்டவணை எப்படி மாறியுள்ளது? யார் ஆதிக்கம்?

2026 ஏப்ரல் 23ம் தேதி இரவு, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி, மும்பை அணியை 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை அணி 206 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மும்பை அணியை 19 ஓவர்களில் 104 ரன்களுக்குள் சுருட்டியது. ரன்கள் அடிப்படையில் இது மும்பையின் மிகப்பெரிய தோல்வியாகவும், சென்னையின் மிகப்பெரிய வெற்றியாகவும் அமைந்துள்ளது. இந்த வெற்றி சென்னை அணிக்கு எப்படி ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும் என்பதையும், முதல் 4 இடங்களை அடைய அவர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

புள்ளி அட்டவணையில் சென்னையின் நிலை என்ன?


மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான 103 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற பிரம்மாண்டமான வெற்றி, சென்னையின் நிகர ரன் விகிதத்தை (NRR) கணிசமாக உயர்த்தியுள்ளது. தற்போது சென்னை 7 போட்டிகளில் 4 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் மொத்தம் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். மும்பைக்கு எதிரான வெற்றியின் மூலம், சென்னை அணி தற்போது புள்ளி அட்டவணையில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ALSO READ: சஞ்சு சாம்சன் அதிரடி சதம் – மும்பையை வீழ்த்தி சென்னை அபார வெற்றி

சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்ன செய்ய வேண்டும்..?

ஐபிஎல் லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் 7 போட்டிகள் மீதமுள்ளன. பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற ஒரு அணிக்கு 16 புள்ளிகள் தேவையாக உள்ளது. சென்னை அணி தற்போது 6 புள்ளிகளுடன் உள்ளது. அதன்படி, சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல இன்னும் 10 புள்ளிகள் தேவையாக உள்ளது. மீதமுள்ள 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றால், 16 புள்ளிகள் கிடைத்துவிடும். ஒருவேளை சென்னை அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றால் (மொத்தம் 14 புள்ளிகள்), அவர்கள் மற்ற அணிகளின் முடிவுகளையும் தங்களின் நிகர ரன் ரேட்டை சார்ந்திருக்க வேண்டியிருக்கும்.

 

Follow Us