IPL 2026: தோல்வியால் துவண்ட ரிஷப் பண்ட்.. சஞ்சீவ் கோயங்கா செய்த செயல்.. ரசிகர்கள் ஷாக்!
Rishabh Pant hugging Sanjiv Goenka: சஞ்சீவ் கோயங்கா தோல்வியின்போது கோபமாகவும், வெற்றியின்போது ஆனந்த கண்ணீர் என்று கிரிக்கெட்டை உணர்ச்சிப்பூர்வமாக அணுகும் விதத்திற்காக அறியப்படுகிறார். ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான வெற்றிகளுக்குப் பிறகு அவரது கண்களில் கண்ணீர் காணப்பட்டது. தோல்விகளின் ஏமாற்றமும் அவரது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 ஏப்ரல் 23ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் லக்னோவில் மோதியது. இருப்பினும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ராஜஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் தோல்வியடைந்தது. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajastan Royals) அணி 159 ரன்கள் எடுத்தது. ஆனால் பதிலுக்கு ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியின் பலவீனம் எங்கே இருந்தது என்று ரிஷப் பண்ட்டிடம் கேட்கப்பட்டபோது, ”அதற்கு என்னிடம் பதில் இல்லை” என்று கூறினார். மோசமான பேட்டிங்கே தோல்விக்குக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். போட்டிக்குப் பிறகு, சஞ்சீவ் கோயங்காவுடன் அவர் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ALSO READ: லக்னோவை சுருட்டி எடுத்த ராஜஸ்தான்.. 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!




உடனடியாக உணர்ச்சியை வெளிப்படுத்தும் சஞ்சீவ் கோயங்கா:
Rishabh Pant hugging Sanjiv Goenka. ❤️ pic.twitter.com/2FLvsKfi51
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 22, 2026
சஞ்சீவ் கோயங்கா தோல்வியின்போது கோபமாகவும், வெற்றியின்போது ஆனந்த கண்ணீர் என்று கிரிக்கெட்டை உணர்ச்சிப்பூர்வமாக அணுகும் விதத்திற்காக அறியப்படுகிறார். ஐபிஎல் 2026 சீசனில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான வெற்றிகளுக்குப் பிறகு அவரது கண்களில் கண்ணீர் காணப்பட்டது. தோல்விகளின் ஏமாற்றமும் அவரது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. நேற்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வியால் அவர் சந்தேகமின்றி ஏமாற்றமடைந்திருந்தார், ஆனால் ரிஷப் பண்டை சந்தித்தபோது அவர் புன்னகை பூத்த முகத்துடன் காணப்பட்டார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஓனரான சஞ்சீவ் கோயங்கா எளிதில் கோபப்படுபவர் என்ற பெயர் சமூக ஊடகங்களில் உண்டு. கடந்த 2024ம் ஆண்டு கே.எல். ராகுலுடனும், கடந்த 2025ம் ஆண்டு ரிஷப் பண்ட்டுடனும் கோயங்கா கோபப்பட்ட வீடியோ இதே போன்ற கேள்விகளை எழுப்பின. ஆனால் 2026 ஏப்ரல் 22ம் தேதி வெளியான வீடியோ வேறு ஒன்றைக் காட்டியது. தோல்விக்குப் பிறகு, ரிஷப் பண்ட் சஞ்சீவ் கோயங்காவைக் கட்டிப்பிடித்தார். அப்போது, வெற்றியோ தோல்வியோ போட்டியின் ஒரு பகுதிதான், தோல்வியை நீங்களே சுமக்க வேண்டாம் என்று கேப்டனை ஊக்குவிப்பது போல கோயங்காவின் முகத்தில் ஒரு புன்னகை இருந்தது.
ALSO READ: மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவாரா? மறுத்த ருதுராஜ் கெய்க்வாட்!
பொறுப்பற்ற ஷாட் ஆடி பண்ட் அவுட்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் பொறுப்பற்ற முறையில் ஆடி தனது விக்கெட்டை இழந்தார். முதல் ஓவரிலேயே படோனி ரன் அவுட் ஆன பிறகு அவர் களமிறங்கினார். இலக்கு (160) அதிகமாக இல்லாததால், அவர் நிதானமாக ஆடியிருக்கலாம். இருப்பினும், பண்ட் முதல் பந்திலிருந்தே ஆக்ரோஷமான ஷாட்களை ஆடும் எண்ணத்தில் களமிறங்கினார். தனது மூன்றாவது பந்திலும் அதேபோன்ற ஒரு பெரிய ஷாட்டை ஆட முயன்றபோது, பண்ட் டக் அவுட் ஆனார். இது அணிக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியது, அந்த அழுத்தம் குறையவே இல்லை. இதுவும் லக்னோ அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.