AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவாரா? மறுத்த ருதுராஜ் கெய்க்வாட்!

MS Dhoni: தோனி சிஎஸ்கே அணிக்கு திரும்பினால், இயல்பாகவே சஞ்சு சாம்சன் தனது விக்கெட் கீப்பிங் இடத்தை இழக்க நேரிடலாம். சஞ்சு ஃபீல்டிங்கிற்கு மாற வேண்டியிருக்கும். ஆனால், சிஎஸ்கேவுக்கு திரும்பினாலும், தோனி எல்லாப் போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்பது சாத்தியமில்லை. தோனி ஒரு சில போட்டிகளில் மட்டும் இம்பாக்ட் வீரராக விளையாடவும் வாய்ப்புள்ளது.

IPL 2026: மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவாரா? மறுத்த ருதுராஜ் கெய்க்வாட்!
எம்.எஸ்.தோனி - ருதுராஜ் கெய்க்வாட்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Apr 2026 14:23 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 23ம் தேதி மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்.எஸ். தோனி விளையாட மாட்டார் எனத் தெரிகிறது. தோனியின் ஆட்டத்தை காண கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில்தான் முன்னாள் சிஎஸ்கே கேப்டன் தோனி (MS Dhoni) விளையாட வாய்ப்பில்லை மும்பையில் நடைபெற்ற ஒரு விளம்பர நிகழ்ச்சியின் போது என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சூசகமாகத் தெரிவித்தார். அதன்படி, தோனி இன்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட வாய்ப்பில்லை எனவும், வருகின்ற 2026 ஏப்ரல் 26ம் தேதி சேப்பாக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. 

ALSO READ: மும்பையும் சென்னையும் தயார்.. களமிறங்கும் தோனி, ரோஹித்.. பிளேயிங் லெவன் விவரம் இதோ!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சி ஆட்டம் ஒன்றின்போது கணுக்காலில் தோனிக்குக் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவர் மெதுவாக உடற்தகுதியை மீட்டு வருகிறார். தோனி எப்போது விளையாடுவார் என்று கூற இயலாது. ஒருவேளை அடுத்த போட்டியில் விளையாடலாம் அல்லது அதற்கடுத்த போட்டியில் விளையாடலாம். ஆனால், அவர் ஒருநாள் நிச்சயம் திரும்புவார் என்று ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.

ALSO READ: தோனி களத்திற்கு எப்போது திரும்புவார்? காத்திருக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்..!

சிஎஸ்கே பந்துவீச்சு பயிற்சியாளர் கூறியது என்ன..?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் தோனியின் உடற்தகுதி குறித்து கூறுகையில், “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டி நடைபெறும் இன்றைய நாளன்று தோனியின் உடற்தகுதியை மருத்துவக் குழு மதிப்பிடும். இறுதி முடிவு தோனியின் கையில்தான் உள்ளது. தோனி தயாராக இருந்தால், அவரும் மருத்துவ ஊழியர்களும் ஒரு முடிவை எடுப்பார்கள்” என்று தெரிவித்தார். ஆனால், பயிற்சி அமர்வில் தோனியின் தீவிரப் பங்கேற்பு ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. தோனி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சி செய்தார். சமீபத்திய பயிற்சியில் தோனி தனது இயல்பான ஹெலிகாப்டர் ஷாட்டையும் ஆடினார்.

சஞ்சு சாம்சன் பீல்டிங் செய்வாரா..?

தோனி சிஎஸ்கே அணிக்கு திரும்பினால், இயல்பாகவே சஞ்சு சாம்சன் தனது விக்கெட் கீப்பிங் இடத்தை இழக்க நேரிடலாம். சஞ்சு ஃபீல்டிங்கிற்கு மாற வேண்டியிருக்கும். ஆனால், சிஎஸ்கேவுக்கு திரும்பினாலும், தோனி எல்லாப் போட்டிகளிலும் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்பது சாத்தியமில்லை. தோனி ஒரு சில போட்டிகளில் மட்டும் இம்பாக்ட் வீரராக விளையாடவும் வாய்ப்புள்ளது. எனவே, அப்படி நடந்தால், சஞ்சு மீண்டும் விக்கெட் கீப்பர் இடத்தைப் பெறுவார்.

இதற்கிடையில், காயம் காரணமாக ஆயுஷ் மத்ரே தொடரிலிருந்து விலகியதால் சென்னை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆடும் லெவனில் மத்ரேவுக்குப் பதிலாக உர்வில் படேல் இடம்பெற வாய்ப்புள்ளது. அதேநேரத்தில்,மத்ரே மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ஆகியோர் மாற்று வீரர்களை சிஎஸ்கே அணி தேடி வருகின்றனர், சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்னும் மாற்று வீரர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆகாஷ் மத்வால் மற்றும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் ஆகியோர் தேர்வுப் போட்டிகளில் பங்கேற்றதாக வதந்திகள் பரவி வருகின்றன.

ஐபிஎல் 2026 சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது. தற்போது, ​​6 போட்டிகளில் 2 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் சென்னை புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. சென்னை நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளது. மும்பை அணிக்கு எதிரான போட்டி இன்று அதாவது 2026 ஏப்ரல் 23ம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும். இந்த போட்டியில் வெற்றிபெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானது.

Follow Us