AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: வெளியேறிய மத்ரே.. ஆகாஷ் மத்வாலை களமிறக்கிய சிஎஸ்கே..!

Chennai Super Kings: உத்தரகாண்டைச் சேர்ந்த 32 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், இதற்கு முன்பு ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஆகாஷ்  மத்வால் 2023 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்-லில் அறிமுகமானார்.

IPL 2026: வெளியேறிய மத்ரே.. ஆகாஷ் மத்வாலை களமிறக்கிய சிஎஸ்கே..!
ஆகாஷ் மத்வால்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Apr 2026 17:02 PM IST

இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசனில் (IPL 2026) 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings), அடுத்தடுத்து வீரர்களின் காயம் காரணமாக இதுவரை மிகவும் சிரமப்பட்டு வருகிறது. இதில் இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் மத்ரேவின் பெயரும் அடங்கும். ஆயுஷ் மத்ரே சிஎஸ்கேவின் ஆரம்ப போட்டிகளில் மிகச் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தியிருந்தார்.இருப்பினும், கடந்த 2026 ஏப்ரல் 18ம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தொடை தசைநார் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, ஆயுஷ் மத்ரே ஐபிஎல் 2026 சீசன் முழுவதும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மத்ரே வெளியேறியதைத் தொடர்ந்து, சிஎஸ்கே அவருக்குப் பதிலாக இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளுக்காக 32 வயதான பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலை சிஎஸ்கே அணி சேர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.

ALSO READ: மும்பைக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடுவாரா? மறுத்த ருதுராஜ் கெய்க்வாட்!

யார் இந்த ஆகாஷ் மத்வால்..?


உத்தரகாண்டைச் சேர்ந்த 32 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் மத்வால், இதற்கு முன்பு ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஆகாஷ்  மத்வால் 2023 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல்-லில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2024-லும் அதே அணிக்காக விளையாடினார். கடந்த ஐபிஎல் 2025 சீசனில் ஆகாஷ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இருப்பினும், ராஜஸ்தான் அணி அவரை இந்த சீசனுக்காக விடுவித்தது. மேலும் வேறு எந்த அணியும் அவரை வீரர் ஏலத்தில் எடுக்கவில்லை. தற்போது ஆயுஷ் மத்ரே காயமடைந்ததைத் தொடர்ந்து அவர் சிஎஸ்கே அணியில் இணைந்துள்ளார். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகாஷ்  மத்வாலை ரூ. 30 லட்சம் என்ற அடிப்படை விலைக்குத் தேர்ந்தெடுத்துள்ளது.

ALSO READ: சிஎஸ்கே வீரரின் தாயார் மறைவு.. சோகத்தில் சென்னை ரசிகர்கள்..!

ஆகாஷ் மத்வால் ஐபிஎல்லில் இதுவரை எப்படி..?

ஆகாஷ் மத்வால், ஐபிஎல்லில் இதுவரை மூன்று சீசன்களில் மொத்தம் 17 போட்டிகளில் விளையாடி, 25.65 சராசரியில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமி ரேட் 10.06 ஆகும். அவரது சிறந்த ஐபிஎல் செயல்பாடு, 2023ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் எடுத்த 5 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் ஆகும்.

Follow Us