AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: அதிருப்தியில் அணி நிர்வாகம்.. கேப்டன் ஹர்திக்கை மாற்றுகிறதா மும்பை இந்தியன்ஸ்?

Mumbai Indians: ஐபிஎல் 2026 தொடரின்போதும் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி தவறுகளைச் செய்து வருகிறார். இந்த சீசனில் இதுவரை அணி 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், ஐபிஎல் 2026 சீசனின் புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது.

IPL 2026: அதிருப்தியில் அணி நிர்வாகம்.. கேப்டன் ஹர்திக்கை மாற்றுகிறதா மும்பை இந்தியன்ஸ்?
ஹர்திக் பாண்ட்யா
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Apr 2026 20:23 PM IST

நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians), கடந்த சில ஆண்டுகளாக மோசமாகச் செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக 3 சீசன்களில் கோப்பையை வெல்லத் தவறிய பிறகு, மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டன் பதவியில் நியமித்தது. தற்போது, ​​தனது 3வது சீசனில் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை வழிநடத்துவதால், அவரது செயல்பாடு குறித்து கேள்விகள் சமூக வலைதளங்களில் கடுமையாக எழுப்பப்படுகின்றன. ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சியின் கீழ் அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்து வருகிறது.

ALSO READ: 7 போட்டிகளில் 6 புள்ளிகள்… சிஎஸ்கே பிளே ஆஃப் தகுதி பெற என்ன செய்ய வேண்டும்..?

ஐபிஎல் 2024-ல் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வர்த்தகம் செய்யப்பட்டு ஹர்திக் பாண்டியா மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். அந்த சீசனில் பாண்டியா தலைமையிலான அணி 10-வது இடத்தைப் பிடித்தது. பின்னர், ஐபிஎல் 2025-ல் மும்பை அணி மீண்டும் எழுச்சி பெற்று பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. தற்போது, ​​ஐபிஎல் 2026-ன் பாதி சீசனுக்குப் பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணி 8-வது இடத்தில் உள்ளது.

ஹர்திக் பாண்ட்யா கோபம்தான் காரணமா..?

ஐபிஎல் 2026 தொடரின்போதும் ஹர்திக் பாண்டியா கேப்டன்சி தவறுகளைச் செய்து வருகிறார். இந்த சீசனில் இதுவரை அணி 7 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், ஐபிஎல் 2026 சீசனின் புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 4 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒவ்வொரு போட்டியின்போது அணிக்குள் ஏதேனும் ஒரு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இதனால, பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்தும் மும்பை நிர்வாகத்திற்கு திருப்தி இல்லை என்று தெரிகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மட்டுமின்றி, ஒரு வீரராகவும் ஹர்திக் பாண்டியா சிறப்பாகச் செயல்படவில்லை. ஐபிஎல் 2026 சீசனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஹர்திக் பாண்ட்யா இதுவரை ஏமாற்றமளித்துள்ளார். இது அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கும் வழிவகுக்கலாம்.

ALSO READ: சஞ்சு சாம்சன் அதிரடி சதம் – மும்பையை வீழ்த்தி சென்னை அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ஹர்திக் பாண்ட்யா நீக்கப்பட்டால், 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவுக்கு கேப்டன் பதவி வழங்கலாம். அப்படி இல்லையென்றால், பும்ராவுக்கு கேப்டன் பதவிக்காக போட்டியில் உள்ளார். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணி மற்ற அணிகளை போன்ற இளம் வீரருக்கு கேப்டன் பதவி வழங்கலாம் என்று நினைத்தால் திலக் வர்மா வசம் கேப்டன்ஷி செல்லும்.

Follow Us