IPL 2026: ஷ்ரேயாஸ் விடுவிப்பு! கேகேஆர் செய்தது பெரிய தவறு.. ஒப்புகொண்ட முன்னாள் பயிற்சியாளர்!
Shreyas Iyer KKR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை விடுவித்தபோது, சந்திரகாந்த் பண்டிட் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். இதற்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை ரூ. 26.75 கோடிக்கு தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டது. ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை ஐபிஎல்-லில் 138 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 3939 ரன்கள் எடுத்துள்ளார்.
2024 ஐபிஎல் சீசனில் (IPL 2026) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அனி கோப்பையை வென்ற பிறகு ஷ்ரேயஸ் ஐயரை (Shreyas Iyer) கேப்டன் பதவியிலிருந்து நீக்கி, அணியிலிருந்து விடுவித்தது ஒரு பெரிய தவறு என்று முன்னாள் கேகேஆர் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஒப்புக்கொண்டார். ஷ்ரேயாஸ் ஐயர் அணியிலிருந்து நீக்கப்பட்டபோது சந்திரகாந்த் பண்டிட்தான் கேகேஆர் பயிற்சியாளராக இருந்தார். இதற்குப் பிறகு, ஷ்ரேயஸ் ஐயர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டார். ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன்சியின் கீழ், பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஐபிஎல் 2026-ல் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று, இதுவரை தோல்வியடையாமல் உள்ளது.
ALSO READ: சிஎஸ்கே ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோவின் அதிரடி சலுகை
ஷ்ரேயாஸ் ஐயரை விடுவித்த கேகேஆர்:
இதுகுறித்து பேசிய முன்னாள் கேகேஆர் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட். “ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த வீரர் மற்றும் கேப்டன் என்றும், 2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் கேகேஆர் அணியை கோப்பைகளை வெல்ல வழிநடத்தினார். இருப்பினும், சில சமயங்களில் அணியின் வியூகம் மற்றும் சூழ்நிலைகள் காரணமாக இதுபோன்ற முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இந்த முடிவு வேண்டுமென்றே எடுக்கப்பட்டது அல்ல, ஆனால் அதற்காக வருத்தமும் தெரிவித்து கொள்கிறேன். ஷ்ரேயாஸ் ஐயரை மட்டுமல்லாமல், பில் சால்ட் போன்ற வேறு சில வீரர்களையும் அணி தவறவிட்டது” என்றார். ஐபிஎல் 2024-ல் சந்திரகாந்த் பண்டிட், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கௌதம் காம்பீர் ஆகியோர் இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றி பாதைக்கு வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்தனர்.




ALSO READ: வெற்றி பாதையில் ராஜஸ்தான் – ஹைதராபாத்.. நேருக்கு நேர் இன்று மோதல்.. வானிலை எப்படி?
ஷ்ரேயஸ் ஐயரின் சாதனைப் பட்டியல் எப்படி இருக்கிறது?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை விடுவித்தபோது, சந்திரகாந்த் பண்டிட் அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். இதற்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை ரூ. 26.75 கோடிக்கு தங்கள் அணியில் சேர்த்துக் கொண்டது. ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை ஐபிஎல்-லில் 138 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 3939 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் 4000 ரன்கள் என்ற சாதனையை எட்டுவதற்கு இன்னும் சில ரன்களே தேவையாக உள்ளது. ஐபிஎல்-லில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 97 ரன்கள் ஆகும். இதுமட்டுமின்றி, இந்த 138 போட்டிகளில் 30 அரை சதங்களையும், ஸ்டிரைக் ரேட் 135.27 ஆகவும், சராசரி 34.86 ஆகவும் உள்ளது. 31 வயதான ஷ்ரேயாஸ் ஐயர், இந்தியாவுக்காக 14 டெஸ்ட், 76 ஒருநாள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.