AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: 265 ரன்கள் இலக்கும் அசால்ட்.. மிகப்பெரிய டார்க்கெட்டை சேஸ் செய்த பஞ்சாப்!

DC vs PBKS: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 ஏப்ரல் 25ம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில்  2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் 265 என்ற பிரமாண்ட இலக்கை வெறும் 18.5 ஓவர்களில் துரத்தி வெற்றி பெற்றது. 

IPL 2026: 265 ரன்கள் இலக்கும் அசால்ட்.. மிகப்பெரிய டார்க்கெட்டை சேஸ் செய்த பஞ்சாப்!
ஷ்ரேயாஸ் ஐயர்Image Source: PBKS/X
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 25 Apr 2026 20:36 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 25ம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் (Delhi Capitals) அணி 20 ஓவர்கள் முடிவில்  2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் 265 என்ற பிரமாண்ட இலக்கை வெறும் 18.5 ஓவர்களில் துரத்தி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில், 7 பந்துகள் மீதமிருக்க போட்டியை வென்றது. இது ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸ் ஆகும். இதற்கு முந்தைய அதிகபட்ச ரன் சேஸ் 262 ரன்களாக இருந்தது, அதையும் பஞ்சாப் அணியே எட்டியிருந்தது.

ALSO READ: 150 ரன்களை எட்டி கெத்து.. பஞ்சாப் அணியை பஞ்சர் செய்த கே.எல்.ராகுல்..!

கே.எல். ராகுலின் சதம் வீண்:

இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. கே.எல். ராகுல் 67 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதேநேரத்தில், நிதிஷ் ராணா 44 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 220 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது, போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இருப்பினும், பஞ்சாபின் அதிரடி பேட்டிங் இந்த முயற்சிகள் அனைத்தையும் வீணடித்தது.

பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில், 7 பந்துகள் மீதமிருக்க போட்டியை வென்றது. இது ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச வெற்றிகரமான ரன் சேஸ் ஆகும். இதற்கு முந்தைய அதிகபட்ச ரன் சேஸ் 262 ரன்களாக இருந்தது, அதையும் பஞ்சாப் அணியே எட்டியிருந்தது.

கே.எல். ராகுலின் சதம் வீண்:

இந்தப் போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து, 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது. கே.எல். ராகுல் 67 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 152 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நிதிஷ் ராணா 44 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு அவர்கள் அமைத்த 220 ரன் பார்ட்னர்ஷிப், போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இருப்பினும், பஞ்சாபின் பேட்டிங் இந்த முயற்சிகள் அனைத்தையும் வீணடித்தது.

பஞ்சாப் கிங்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரன் சேஸ்:

பதிலுக்கு ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியான தொடக்கத்தைக் கண்டது. அந்த அணி பவர்பிளேவிலேயே 116 ரன்கள் எடுத்தது. பிரியான்ஷ் ஆர்யா 17 பந்துகளில் ஐந்து சிக்ஸர்கள் உட்பட 43 ரன்கள் எடுத்தார். பிரப்சிம்ரன் சிங் வெறும் 26 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உட்பட 76 ரன்கள் எடுத்து ஒரு அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தனர். ஆர்யாவும் பிரப்சிம்ரனும் ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 7 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 71 ரன்கள் எடுத்து போட்டியை வென்றார்.  நேஹல் வதேரா 15 பந்துகளில் 25 ரன்களும், ஷஷாங்க் சிங் 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 19 ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.

ALSO READ: 150 ரன்களை எட்டி கெத்து.. பஞ்சாப் அணியை பஞ்சர் செய்த கே.எல்.ராகுல்..!

ஐபிஎல் 2026-ல் பஞ்சாபின் ஆதிக்கம்:

இந்த வெற்றியின் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2026 தொடரில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டது. பஞ்சாப் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி தோல்வியடையாமல் உள்ளது. பஞ்சாப் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது மற்றும் ஒரு போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. 13 புள்ளிகளுடன், பஞ்சாப் கிங்ஸ் புள்ளி அட்டவணையில் முதலிடத்தில் உள்ளனர். இதற்கிடையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 போட்டிகளில் தனது 4வது தோல்வியை சந்தித்தது.

Follow Us