சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் ஒரு வைரல் வீடியோ, இணைய பயனர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எளிதாக பார்க்கக்கூடிய எறும்புகள் கூட, இந்த வீடியோவில் ஒரு கொலை காட்சி போல காட்டப்பட்டிருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. டிக்டாக்கில் வெளியான இந்த வீடியோவில், ஒருவர் பெரிய அளவில் எறும்புகளை சேகரித்து, ஒரு பாத்திரத்தில் வைத்து தீயில் வைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. எறும்புகள் தீயில் வறுக்கப்படுவது, மரக்கட்டையால் நசுக்கப்படுவது மீண்டும் வெப்பத்திற்கு உட்படுத்தப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.