Gold Price : உயர்வை சந்தித்த தங்கம், வெள்ளி.. இன்றைய நிலவரம் என்ன?
Gold and Silver Price Hiked In Chennai | தங்கம் மற்றும் வெள்ளி கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் கிராமுக்கு ரூ.100 மற்றும் வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்வை சந்தித்துள்ளது.
சென்னை, ஏப்ரல் 25 : தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி இன்று விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிலையற்ற தன்மையில் தங்கம், வெள்ளி விலை
ஈரான் போர் காரணமாக தங்கம் நிலையற்ற தன்மையில் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, புவிசார் பதற்றங்கள் அதிகரித்துள்ளது ஆகியவை முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டும் வகையில் வைத்துள்ளது. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி, பெரிய அளவில் உயர்வை சந்திக்காமலும், வீழ்ச்சியை சந்திக்காமலும் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : மே மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. பட்டியல் இதோ!




இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.