ஹைதராபாத் நகரில் இரவு நேரத்தில் தனியாக நடந்த அனுபவத்தை பகிர்ந்த பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லீஷா என்ற இளம் பெண் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இரவு 11 மணிக்கு தனியாக வீட்டிற்கு நடந்து சென்றபோதும் எந்தவித பாதுகாப்பு பிரச்சினையும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.