AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மே மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. பட்டியல் இதோ!

2026 May Bank Holiday List | ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை வழங்கப்படும். அந்த வகையில் மே மாத வங்கி விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. அதாவது, மே மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. பட்டியல் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 Apr 2026 13:17 PM IST

வார விடுமுறை, அரசு பண்டிகைகள் காரணமக வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை வழங்கப்படும். அந்த வகையில் 2026, மே மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மொத்தம் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மே மாதத்தில் எந்த எந்த நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2026, மே மாதத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் விடுமுறை

மே 01, 2026 – புத்த பூர்னிமா மற்றும் உழவர் தினம் என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 03, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 09, 2026 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 10, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 17, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 23, 2026 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 24, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 27, 2026 – பக்ரித் பண்டிகை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மே 31, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட படி தமிழகத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 63-ல் இருந்து ரூ.116 அமெரிக்க டாலர்களாக உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. மத்திய அமைச்சகம் வெளியிட்ட தரவு!

வங்கி விடுமுறை நாட்களில் என்ன செய்யலாம்?

இன்றளவும் கூட பொதுமக்கள் தங்களின் பெரும்பாலான தேவைகளுக்கு வங்கிகளுக்கு செல்கின்றனர். எனவே விடுமுறை பட்டியலின் அடிப்படையில் தேவைகளை திட்டமிட்டுக்கொள்வது சிறப்பானதாக இருக்கும். இந்த 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு இருந்தாலும் ஏடிஎம், ஆன்லைன் பேங்கிங் மற்றும் யுபிஐ செயலிகள் வழக்கம் போல செயல்படும். எனவே பொதுமக்கள் தங்களது பண பரிவர்த்தனை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us