ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் உள்ள கிபாலே தேசிய பூங்காவில் வாழும் சிம்பான்சிகள் தற்போது எட்டு ஆண்டுகளாக உள்நாட்டுப் போரைப் போன்ற கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் கூறுவதன்படி, உலகில் அறியப்பட்ட மிகப்பெரிய காட்டு சிம்பான்சி கூட்டமாக இருக்கும் இந்தக் குழு, முன்பு ஒன்றுபட்ட சமூகமாக இருந்தது.