பாலிவுட் திரைப்படமான Munna Bhai MBBS போல கற்பனை கதையாக இல்லாமல், பீகாரில் அதற்கு ஒத்த சம்பவம் உண்மையில் நடந்துள்ளது. மேற்கு சாம்பரன் மாவட்டம் பாகாஹா அரசு மருத்துவமனையில், மருத்துவர் பற்றாக்குறையால் ஒரு பாதுகாப்பு காவலர் நோயாளியின் காயத்திற்கு தையல் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.