அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக சென்ற ஈரான் பிரதிநிதிகள் குழு, திரும்பும் பயணத்தின் போது தங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் இருப்பதாக தகவல் கிடைத்ததால், திடீரென தங்கள் பயணத்தை மாற்றியுள்ளனர்.