AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சடாரென சரிந்த தங்கம் விலை.. தொடரும் நற்செய்தி.. சென்னையில் இன்று ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

Gold Price Drop Chennai: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது. தங்கம் சவரன் ரூ.1,11,600-க்கும், கிராம் ரூ.13,950-க்கும் விற்பனையாகிறது. சர்வதேசச் சந்தை நிலவரங்கள் மற்றும் பண்டிகைக் காலத் தேவை அதிகரித்துள்ள சூழலில், தங்கம் மற்றும் வெள்ளியின் நேரடி நிலவரத்தை விரிவாக இங்கு காணலாம்.

சடாரென சரிந்த தங்கம் விலை.. தொடரும் நற்செய்தி.. சென்னையில் இன்று ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 02 Sep 2026 10:36 AM IST

செப்டம்பர் 2, 2026:உலகளாவிய பொருளாதார மாற்றங்கள், சர்வதேசச் சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் நாணயப் பரிமாற்றச் சந்தை நிலவரங்களின் காரணமாகத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்துள்ளது நுகர்வோருக்கும், நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களுக்கும் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. குறிப்பாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், நகைக்கடைகளில் வர்த்தகம் சுறுசுறுப்படைந்து மக்கள் ஆர்வத்துடன் நகை வாங்கத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிக்க: ஒரு மாத EMI-ஐ தவர விட்டால் என்ன நடக்கும்?.. இவ்வளவு சிக்கல்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

சவரனுக்கு ரூ.800 குறைந்தது:

சென்னையில் இன்றைய வர்த்தக நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறைந்து விற்பனையாகி வருகிறது. இந்த அதிரடி விலைச் சரிவின் காரணமாக, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,11,600 ஆக நிர்ணயிக்கப்பட்டு வர்த்தகமாகிறது. அதேபோல், ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.225 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,950 என்ற விலைக்கு விற்பனையாகிறது. தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக மீண்டும் இறங்குமுகத்தில் பயணிப்பது நடுத்தரக் குடும்பத்தினருக்கு நிம்மதியை அளித்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி நிலவரம்:

அதேவேளையில், வெள்ளியின் வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில், ஒரு கிராம் வெள்ளி ரூ.250 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டின் விலையும் சரிவைச் சந்தித்துள்ள இந்தச் சாதகமான சூழல், நகை முதலீட்டாளர்களுக்கும் சாதாரண நுகர்வோருக்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இதையும் படிக்க: ஐடி வேலையை உதறிவிட்டு பழ தோட்டம் அமைத்த நபர்.. ஆண்டுக்கு ரூ.60 கோடி வருமானம்.. சேத்தன் சாதித்தது எப்படி?

சந்தை நிபுணர்களின் கணிப்பு:

அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகள், கச்சா எண்ணெய் விலை மாற்றம் மற்றும் சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களே தங்கம் விலையில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வரவிருக்கும் பண்டிகைக் காலம் மற்றும் திருமண சீசனை முன்னிட்டு, தங்கம் விலை தற்காலிகமாகச் சரிந்துள்ள இந்த நேரத்தில் நகைகளை வாங்கிச் சேமிப்பது அல்லது முன்பதிவு செய்து கொள்வது மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Follow Us