Gold Price : 10 நாட்களுக்கு பிறகு உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.1,040 உயர்வை சந்தித்தது!
Gold Price Increased After 10 Days | மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த 10 நாட்களாக சரிவை சந்தித்த தங்கம் தற்போது உயர்வை சந்தித்துள்ளது.
சென்னை, ஜுன் 09 : மேற்கு ஆசியா போருக்கு (West Asia War) மத்தியில் தங்கம் தொடர்ந்து நிலையற்ற தன்மையில் தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த 10 நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வந்த தங்கம் இன்று விலை உயர்ந்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.130 உயர்வை சந்தித்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
10 நாட்களுக்கு பிறகு மீண்டும் விலை உயர்ந்த தங்கம்
மேற்கு ஆசியா போர் காரணமாக சர்வதேச அளவில் பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலை, மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்தது. அதன் காரணமாக ஒரு கிராம் தங்கம் ரூ.14,000-க்கு கீழ் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தான் 10 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க : ரேஷன் கார்டில் இத செய்யவில்லை என்றால் அரிசி கிடைக்காது.. முக்கிய அறிவிப்பு!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன?
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று (ஜூன் 08, 2026) தங்கம் கிராமுக்கு ரூ.130 சரிந்த நிலையில், இன்று மீண்டும் அதே அளவு விலை உயர்ந்துள்ளது.