ஹேப்பி நியூஸ்.. அதிரடியாக குறைந்த தங்கம் விலை – எவ்வளவு தெரியுமா?
Gold Rate : 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு சற்று சரிவை நோக்கி இருந்த தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்த நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது.
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு சற்று சரிவை நோக்கி இருந்த தங்கம் விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மே 13, 2026 இன்று காலை 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400க்கும் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,23,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக தங்கத்தில் முதலீடு செய்ய திட்டமிடுபவர்களுக்கு இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதிரடியாக குறைந்த தங்கம் விலை
மத்திய நிதியமைச்சகம் தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி குறித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தங்கம் விலை மே 13, 2026 இன்று ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க : FD-ல் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.10,000 வருமானமாக பெறலாம்.. எப்படி?




அதன்படி மே 13, 2026 காலை நிலவரப்படி 22 காரட் தங்கம் விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400க்கும் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,23,200க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.910 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,860க்கும் சவரனுக்கு ரூ. 7,280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,880க்கும் விற்பனையானது. மேலும்வெள்ளி விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.330க்கும், ஒரு கிலோ ரூ.3,30,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மே 13, 2026 மாலை தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 காரட் தங்கத்தின் விலை ரூ.400 குறைந்து ஒரு கிராம் ரூ.15,000க்கும், சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ஒரு சவரன் ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.12,560க்கும் சவரனுக்கு ரூ. 2,400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.320க்கும், ஒரு கிலோ ரூ.3,20,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க : கேஸ் சிலிண்டர் விநியோக மோசடி.. கவனமாக இருங்கள்.. பொதுமக்களை எச்சரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்!
ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பைப் பாதுகாப்பதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். தற்போதைய சூழலில் தங்கத்தின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளதைக் குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதார நலனை மனதில் கொண்டு, மக்கள் குறைந்தது ஓராண்டு காலத்திற்காவது தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.