AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.15 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 May 2026 11:02 AM IST

சென்னை, மே 12 : மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இன்று, தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.15 உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம், வெள்ளி மீது தாக்கம் ஏற்படுத்தும் மேற்கு ஆசியா போர்

மேற்கு ஆசியா போர் காரணமாக சர்வதே அளவில் புவிசார் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோ மற்றும் டீசல் விலை தட்டுப்பாடு என பல சிக்கல்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டு வருகின்றனர். மேற்கு ஆசியா போர் சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது.

இதையும் படிங்க : தங்கம் வாங்க வேண்டாம்.. நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை.. காரணம் என்ன?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,330-க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,14,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300-க்கும், கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்தும் ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us