AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குழந்தை வளர்ப்பில் தூக்கமின்மை: பழங்கால பெற்றோர்கள் கையாண்ட ரகசியம் என்ன?

The Secret of Baby Sleep: நவீன கால பெற்றோர்கள் ஒரு நாளில் ஏழு மணிநேரம் உறங்கினாலும், சமூக ஆதரவு இல்லாததாலும் வேலையில் நிலவும் அழுத்தத்தாலும் கடுமையான சோர்வை உணர்கின்றனர். ஆனால், நம் முன்னோர்கள் இரவு முழுவதும் ஒரே சீராக உறங்கும் முறையை பின்பற்றாமல், அவ்வப்போது விழித்து உறங்கும் 'துண்டு துண்டான தூக்கத்தை' (Segmented sleep) இயல்பாக ஏற்றுக்கொண்டனர்.

குழந்தை வளர்ப்பில் தூக்கமின்மை: பழங்கால பெற்றோர்கள் கையாண்ட ரகசியம் என்ன?
தூக்கமின்மைImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 12 May 2026 10:15 AM IST

இன்றைய காலகட்டத்தில் புதிய பெற்றோர்களாக மாறுபவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலாக ‘தூக்கமின்மை’ கருதப்படுகிறது. இது வெறும் தூக்கம் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல, சமூக ஆதரவு இல்லாத தனிக்குடித்தனங்கள் மற்றும் வேலைப்பளு ஆகியவையும் சேர்ந்து பெற்றோர்களை மிகக்கடுமையான சோர்வுக்கு உள்ளாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 400-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், குழந்தை பிறந்த பிறகு தங்களின் வாழ்க்கை முடிவில்லாத சோர்வில் சிக்கியுள்ளதாக பலரும் ஆதங்கப்பட்டுள்ளனர். இருப்பினும், மனித வரலாற்றின் பெரும்பகுதியை ஆய்வு செய்யும் போது, நம் முன்னோர்கள் குழந்தைகளை வளர்க்கும் போது இவ்வளவு பெரிய தூக்கப் பிரச்சனையை எதிர்கொள்ளவில்லை என்பது ஆச்சரியமான உண்மையாக உள்ளது.

ஆய்வுகள் சொல்லும் தூக்கக் கணக்கு

ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகளின்படி, ஒரு குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் தாய்க்கு சராசரியாக ஒரு மணிநேரத் தூக்கம் குறைகிறது, தந்தையருக்கு சுமார் 20 நிமிடங்கள் வரை தூக்கம் குறைகிறது. இருப்பினும், வேட்டையாடி சமூகமாக வாழ்ந்த பழங்குடி மக்களுடன் ஒப்பிடுகையில், நவீன கால மக்கள் அதிக நேரம் படுக்கையில் செலவிட்டாலும், அவர்கள் அடையும் திருப்தி மிகக் குறைவாகவே உள்ளது. சுமார் 40,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் சராசரியாக ஏழு மணிநேரம் தூங்குகிறார்கள். ஆனால், அவர்கள் தங்களை மிகவும் சோர்வாக உணர்வதாகத் தெரிவிக்கின்றனர். இதற்கு மாறாக, ஆப்பிரிக்காவின் ஹட்சா (Hadza) போன்ற பழங்குடி மக்கள் குறைந்த நேரமே தூங்கினாலும், தங்களின் தூக்கம் மிகவும் சிறப்பாக இருப்பதாகக் கூறுகின்றனர்.

பழங்கால தூக்க முறையும் தற்போதைய மாற்றமும்

தொழிற்புரட்சிக்கு முன்பாக, மக்கள் ஒரே மூச்சில் நீண்ட நேரம் தூங்கும் (Consolidated Sleep) பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. பழங்கால மக்கள் இரவில் அடிக்கடி விழிப்பதையும், மீண்டும் உறங்குவதையும் இயல்பாகக் கருதினர். ஆனால், இன்றைய நவீன உலகில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான வேலை முறைகள் இருப்பதால், இரவில் ஆழ்ந்த உறக்கம் கட்டாயமாகிறது. வாகனம் ஓட்டுதல், கனரக இயந்திரங்களை இயக்குதல் போன்ற பாதுகாப்பு சார்ந்த வேலைகள் நம் முன்னோர்களுக்கு இல்லாததால், அவர்களுக்குத் துண்டு துண்டான தூக்கம் ஒரு சுமையாகத் தெரியவில்லை. இன்றைய பெற்றோர்கள் ‘குழந்தை தனியாகத் தூங்க வேண்டும்’ என்ற நவீனக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதுதான் அவர்களின் விழிப்புணர்வை அதிகரித்து சோர்வை உண்டாக்குவதாக மானுடவியலாளர்கள் கருதுகின்றனர்.

இயற்கையான தூக்கச் சூழலின் முக்கியத்துவம்

பழங்கால தாய்மார்கள் தங்கள் குழந்தைகளைத் தன்னுடனேயே அணைத்துக்கொண்டு உறங்கும் முறையைப் பின்பற்றி வந்தனர். இதனை ஆய்வாளர்கள் ‘பிரெஸ்ட் ஸ்லீப்பிங்’ (Breastsleeping) என்று அழைக்கிறார்கள். தாய் மற்றும் குழந்தையின் உடல் ஒன்றாக இணையும் போது, பால் புகட்டும் போது சுரக்கும் ‘புரோலாக்டின்’ போன்ற ஹார்மோன்கள் தாய்க்கு மீண்டும் எளிதில் உறக்கம் வர உதவுகின்றன. குழந்தை அருகில் இருக்கும்போது, தாய் முழுமையாக விழிக்காமலேயே குழந்தையைக் கவனித்துக் கொள்ள முடிகிறது. ஆனால், நவீன உலகில் பாதுகாப்பு கருதி குழந்தையைத் தனித் தொட்டிலில் கிடத்துவதும், விழிப்புடன் இருக்க கைபேசியைப் பயன்படுத்துவதும் மூளையை முழுமையாக விழிப்படையச் செய்து விடுகிறது. இதனால் ஒருமுறை விழித்தால் மீண்டும் உறங்குவது கடினமாகிறது. நம் முன்னோர்களைப் போல தூக்கத்தைப் பற்றிய இறுக்கமான விதிகளைத் தளர்த்திக் கொள்வது, இன்றைய பெற்றோர்களின் சோர்வைக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Follow Us