Summer Health Tips: கோடையில் வெப்பத்தாக்க அபாயம்.. எப்போது கவனமாக இருப்பது முக்கியம்?
Heat Stroke In Summer: ஒருவருக்கு வெப்பத் தாக்கத்திற்குப் பல காரணங்கள் உள்ளன. நீண்ட நேரம் வெயிலில் இருப்பது, மூடிய இடங்களில் தங்குவது அல்லது அதிகப்படியான உடல் உழைப்பு ஆகியவை முக்கியக் காரணங்களாகும். உடல் மிகவும் சூடாகி, வியர்வை மூலம் தன்னைத்தானே குளிர்விக்க முடியாதபோது இந்த நிலை ஏற்படுகிறது. இதில், மற்றவர்களை விட சிலருக்கு ஆபத்து அதிகம்.
கோடைக்காலத்தில் (Summer) வெப்பம் நாளுக்குநாள் அதிகரிக்கும்போது, உடல் சில அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அவற்றை நாம் பெரும்பாலும் சாதாரண விசயம் என்று புறக்கணிக்கிறோம். ஆனால் இந்தச் சிறிய அறிகுறிகள் வெப்பத்தாக்கம் (Heat Stroke) போன்ற ஒரு முக்கியமான பிரச்சனையாக மாறக்கூடும். உடல் வெப்பநிலை திடீரென மிகவும் அதிகரித்து, உடலால் தன்னைத்தானே குளிர்விக்க முடியாதபோது வெப்பத்தாக்கம் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியமாகிறது. அதன்படி, வெப்பத்தாக்கத்திற்கு முன்பு உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: அச்சுறுத்தும் கடும் வெப்ப அலை: பொதுமக்களுக்கு விடுத்த அவசர எச்சரிக்கை..!
வெப்பத் தாக்கத்திற்கு முன்பு உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஆரம்பத்தில் லேசான தலைச்சுற்றல், பலவீனம் மற்றும் மயக்கம் ஆகியவை ஏற்பட தொடங்கும். சில சமயங்களில், ஒருவருக்கு குமட்டல் அல்லது வயிற்று பிரச்சனைகள் கூட ஏற்படலாம். வெப்பத்தைத் தாங்கிக்கொள்வது கடினமாகும்போது, உடல் இத்தகைய எச்சரிக்கையை வெளியிட தொடங்கும். தொடர்ந்து, இந்த அறிகுறிகள் படிப்படியாக தீவிரமடையலாம். அதன்படி உடல் வெப்பநிலை உயரும், இதயத் துடிப்பு அதிகரிக்கும், மற்றும் சுவாசம் இயல்பை விட வேகமாகும். சிலருக்கு வியர்ப்பது நின்றுவிடும், மற்ற சிலருக்கு அதிகமாக வியர்க்கும். தோல் சிவப்பாகவோ அல்லது வழக்கத்திற்கு மாறாக வறண்டோ காணப்படலாம்.




மூளை பாதிக்கப்படத் தொடங்கும் போது மிகவும் ஆபத்தான அறிகுறிகள் ஏற்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக குழப்பம், பேசுவதில் சிரமம் போன்றவை ஏற்படலாம். சில சமயங்களில், சுயநினைவிழப்பும் ஏற்படலாம். இந்த நிலையில்தான் வெப்பத்தாக்கம் உயிருக்கு ஆபத்தானதாக மாறக்கூடும், மேலும் இதற்கு உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது.
வெப்பத் தாக்கம் எதனால் ஏற்படுகிறது?
ஒருவருக்கு வெப்பத் தாக்கத்திற்குப் பல காரணங்கள் உள்ளன. நீண்ட நேரம் வெயிலில் இருப்பது, மூடிய இடங்களில் தங்குவது அல்லது அதிகப்படியான உடல் உழைப்பு ஆகியவை முக்கியக் காரணங்களாகும். உடல் மிகவும் சூடாகி, வியர்வை மூலம் தன்னைத்தானே குளிர்விக்க முடியாதபோது இந்த நிலை ஏற்படுகிறது. இதில், மற்றவர்களை விட சிலருக்கு ஆபத்து அதிகம். சிறு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் ஏற்கனவே உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் எளிதில் பாதிக்கப்படலாம். வெயிலில் அதிக நேரம் வேலை செய்பவர்கள், தீவிரமாக உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் கவனமுடன் இருப்பது முக்கியம்.
ALSO READ: கூலரில் சூடான காற்று வெளிவருகிறதா..? இதை செய்தால் குளிர்ந்த காற்று வெளியே வரும்!
வெப்பத்தாக்கம் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்..?
கோடைக்காலத்தில் ஒருவருக்கு வெப்ப தாக்கம் ஏற்படாமல் இருக்க, அவ்வப்போது உடலுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம். நிறைய தண்ணீர் குடிப்பது, இலகுவான மற்றும் தளர்வான ஆடைகளை அணிவது, மற்றும் சூரிய ஒளி கடுமையாக இருக்கும்போது வெளியே செல்வதை தவிர்த்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். ஒருவருக்கு வெப்ப தாக்கத்தின் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அந்த நபரை குளிர்ச்சியான இடத்திற்கு அழைத்துச் சென்று குளிர்விக்க வேண்டும். வெப்பத்தாக்கம் ஒரு சாதாரண பிரச்சனை அல்ல. உடலின் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், அதைத் தவிர்க்கலாம். இருப்பினும், அவற்றைப் புறக்கணித்தால், நிலைமை மோசமடையக்கூடும். எனவே, உடலின் அறிகுறிகளை அலட்சியப்படுத்துவது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும்.