AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தரம் தான் முக்கியம்: யூ-டியூப் ஃபுட் ரிவ்யூவுக்கு விழுந்தது அதிரடி பூட்டு!

FSSAI Food Review Rules: தமிழ்நாட்டில் இனி FSSAI உரிமம் பெற்றுள்ள அங்கீகரிக்கப்பட்ட உணவகங்களில் மட்டுமே யூ-டியூபர்கள் ஃபுட் ரிவ்யூ செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. கடைகளின் வெளித்தோற்றம் மற்றும் உள் அலங்காரங்களை மட்டுமே காட்டி நுகர்வோரை திசைதிருப்பும் வகையில் வீடியோக்களை வெளியிடக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் தான் முக்கியம்: யூ-டியூப் ஃபுட் ரிவ்யூவுக்கு விழுந்தது அதிரடி பூட்டு!
ஃபுட் ரிவ்யூImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 24 Jun 2026 18:05 PM IST

வலைத்தளங்களில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, உணவகங்களை விமர்சனம் செய்யும் யூ-டியூபர்களுக்கு (YouTubers) தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்காலத்தில் சமூக ஊடகங்களில் ‘ஃபுட் ரிவ்யூ’ (Food Review) என்ற பெயரில் வெளியாகும் காணொளிகள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனை முறைப்படுத்தும் நோக்கில், இனிவரும் காலங்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) முறையான உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்ற உணவகங்களில் மட்டுமே யூ-டியூபர்கள் உணவு விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று துறை ரீதியான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் இல்லாத சட்டவிரோத கடைகளை விளம்பரப்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவகத்தின் தோற்றம் மட்டுமே முக்கியமல்ல; தரமும் அவசியம்!

பொதுவாகப் பெரும்பாலான ஃபுட் விளாப்பாளர்கள் (Food Vloggers) ஒரு உணவகத்திற்குச் செல்லும்போது, அங்கிருக்கும் கவர்ச்சிகரமான விளக்குகள், கடையின் வெளித்தோற்றம் மற்றும் உள் அலங்காரங்களை (Interior and Exterior) மட்டுமே பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தி வருகிறார்கள். இனிமேல் இதுபோன்ற மேலோட்டமான காட்சிகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஃபுட் ரிவ்யூ செய்யக் கூடாது என்று உணவு பாதுகாப்புத் துறை திட்டவட்டமாகக் கூறியுள்ளது. கடைகளின் அழகை விட, அங்கு பரிமாறப்படும் உணவின் தரமே முக்கியம் என்பதால், நுகர்வோரை திசைதிருப்பும் வகையிலான வீடியோக்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதாரமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறதா எனவும் கண்காணிக்க வேண்டும்!

யூ-டியூபர்கள் வெறும் சுவையை மட்டும் பாராட்டாமல், அந்த உணவகத்தில் சமையல் கூடம் எவ்வளவு தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது, சமையல் கலைஞர்கள் சுகாதாரமான முறையில் உணவைத் தயாரிக்கிறார்களா என்பதையும் கூர்ந்து கவனித்துத் தங்களது வீடியோக்களில் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமையலறையின் சுகாதாரம், பயன்படுத்தப்படும் எண்ணெயின் தரம் மற்றும் தூய்மையான குடிநீர் போன்ற அத்தியாவசியக் காரணிகளை நுகர்வோருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவது யூ-டியூபர்களின் சமூகப் பொறுப்பு என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தவறான விளம்பரங்களைத் தடுத்து நுகர்வோர் நலன் காக்கும் முயற்சி

சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் (Followers) கொண்ட யூ-டியூபர்கள் வழங்கும் விமர்சனங்களை நம்பியே பொதுமக்கள் அந்தந்த உணவகங்களைத் தேடிச் செல்கின்றனர். எனவே, பணத்திற்காகவோ அல்லது இலவச உணவிற்காகவோ தரமற்ற, சுகாதாரமற்ற கடைகளை மிகச்சிறந்த உணவகம் என்று தவறாக விளம்பரப்படுத்துவதைத் தடுக்கவே இந்த புதிய நெறிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விதிகளை மீறி, நுகர்வோரை ஏமாற்றும் வகையில் செயல்படும் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் பாயும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

Follow Us