AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கம் வாங்க சரியான நேரம்.. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் எவ்வளவு தெரியுமா ?

கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவை கண்டு வந்த சூழலில், ஜூன் 2ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,500க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் வாங்க சரியான நேரம்.. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் எவ்வளவு தெரியுமா ?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 02 Jun 2026 10:23 AM IST

தங்கம் விலை, ஜூன் 2, 2026: தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில், ஜூன் 2ஆம் தேதியான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ஒரு லட்ச ரூபாயை கடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது வரை ஒரு சவரன் தங்கம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த மே 13ஆம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் கிட்டத்தட்ட ரூ.5,000க்கும் மேல் உயர்ந்து வரலாறு காணாத அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

தங்கம் விலை உயர்ந்தாலும், நுகர்வோரும் நகை பிரியர்களும் தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,500க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும் படிக்க: பிபிஎஃப் திட்டத்தில் வட்டியை முறையாக பெற இது முக்கியம்.. முழு விவரம் இதோ!

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:

கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவை கண்டு வந்த சூழலில், ஜூன் 2ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,500க்கும், ஒரு சவரன் ரூ.1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,818க்கும், ஒரு சவரன் ரூ.1,26,544க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபருக்கு எவ்வளவு வங்கி கடன் கிடைக்கும்?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

வெள்ளி விலை கடந்த ஐந்து நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவில் இருந்து வரும் நிலையில், மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். அதேபோல், தங்கம் வாங்குவதற்கு இது உகந்த நேரமாகவும் பலர் கருதுகின்றனர்.

Follow Us