மாதத்தின் தொடக்கத்திலேயே சரிவை சந்தித்த தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
அந்தவகையில், நேற்று முன் தினமும் (மே 30) 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,17,040 என்ற உச்ச விலையிலேயே நீடித்தது. இந்த நிலையில், புதிய மாதத்தின் தொடக்கமான இன்று (ஜூன் 1, 2026) மாதத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
Gold Price Today: கடந்த மே மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்தது. குறிப்பாக, கடந்த மே 13-ஆம் தேதி தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,000-க்கும் மேல் உயர்ந்து வரலாறு காணாத அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின்னர், தொடர்ந்து தங்கம் விலை ஏற்றத்தில் இருந்ததால், நுகர்வோர்கள் மற்றும் நகைப்பிரியர்கள் பெரும் கலக்கம் அடைந்திருந்தனர். குறிப்பாக, கடந்த 2 நாட்களாக தங்கம் விலை உச்சத்தில் இருந்து வந்தது.
இதையும் படிக்க: இன்று முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.. பான் கார்டு தளர்வு முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவு வரை.. முழு விவரம்!!
அந்தவகையில், நேற்று முன் தினமும் (மே 30) 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,17,040 என்ற உச்ச விலையிலேயே நீடித்தது. இந்த நிலையில், புதிய மாதத்தின் தொடக்கமான இன்று (ஜூன் 1, 2026) மாதத்தின் முதல் நாளே தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்து நுகர்வோருக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
புதிய தங்கம் விலை நிலவரம்:
அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,500-க்கும், சவரனுக்கு ரூ.1,040-ம் அதிரடியாகக் குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம்:
அதேபோல், சிறிய ரக மற்றும் கற்கள் பதித்த நகைகள் செய்யப் பயன்படும் 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று சரிந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.95-ம், சவரனுக்கு ரூ.760-ம் குறைந்துள்ளது. அதன்படி, இன்று 18 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,180க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.97,440-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தின் விலை பெருமளவு சரிந்துள்ள வேளையில், வெள்ளியின் விலையில் இன்று எவ்வித மாற்றமும் இன்றி நிலையாக உள்ளது. அதன் படி, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: பிஎஃப் கணக்கில் பெயர், பிறந்த தேதி தவறாக உள்ளதா?.. உங்களால் பணத்தை எடுக்க முடியாது!
மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை சவரனுக்கு ஆயிரம் ரூபாய்க்கும் மேல் குறைந்திருப்பது, இந்த ஜூன் மாதத்தில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டுள்ள நடுத்தரக் குடும்பத்தினருக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.