இரண்டு நாட்களுக்கு பின் சற்று உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்துள்ளதுடன், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,060-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,338-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,704-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜூன் 18, 2026: தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்றைய தினம் ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்திருந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.30 அதிகரித்து விற்பனை:
தங்கத்தின் விலையைப் பொறுத்தவரையில், ஒரு கிராமுக்கு ரூ.30 அதிகரித்துள்ளதுடன், ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,060-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,338-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,704-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், கடந்த இரண்டு நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. அந்த வகையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: இந்தியாவில் E85, E100 எரிபொருள் – வாகனங்களின் விலை உயருமா? மைலேஜ் குறையுமா?
ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சீரற்ற நிலையில் இருந்து வருகிறது. இருந்தபோதிலும், அதிரடியான விலை உயர்வு எதுவும் ஏற்படவில்லை. மாறாக, தொடர்ந்து விலை சரிந்து வந்ததால் வாடிக்கையாளர்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முடிவுக்கு வந்த போர் – தங்கம் விலை அதிகரிக்குமா?
இதற்கிடையில், நீடித்து வந்த பதற்றம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், போர் தொடர்பான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போர் பதற்றம் குறைந்துள்ள சூழலில், முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
மேலும் படிக்க: அஞ்சலக ஆர்டி திட்டம் – ரூ. 300 செலுத்தி ரூ. 17 லட்சம் லாபம் பெறலாம் – எப்படி தெரியுமா?
இதன் காரணமாக, வரக்கூடிய நாட்களில் தங்கம் விலை படிப்படியாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக சரிந்து வந்த தங்கம் விலை, அடுத்தடுத்த நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.