AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நகை வாங்கும் ப்ளான் இருக்கா? தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

நேற்றைய தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நகை வாங்கும் ப்ளான் இருக்கா? தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Jun 2026 10:16 AM IST

ஜூன் 17, 2026: தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை சீரான நிலையிலேயே இருந்து வருகிறது. அந்த வகையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை சரிந்துள்ளது. நேற்றைய தினம் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், ஜூன் 17ஆம் தேதியான இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் பெரிய அளவு மாற்றமின்றி தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சரியும் தங்கம் விலை:

நேற்றைய தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,12,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,305-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஈரான் போர் எதிரொலி.. கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் தங்கம்:

ஈரான் போரின் காரணமாக உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதன் தாக்கமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகளிலும் கடும் மாற்றங்கள் ஏற்பட்டன. எடுத்துக்காட்டாக, ஈரான் போர் தீவிரமடையும் சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், தங்கத்தின் விலை சரிவை சந்தித்தது. அதேவேளை, போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் தகவல்கள் வெளியாகும் போது தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது.

மேலும் படிக்க: டீசல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்திய மத்திய அரசு!

இவ்வாறு கடந்த மூன்று மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. வரக்கூடிய நாட்களிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து தங்கத்தின் விலை சற்று சரிந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow Us