AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : சரிந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold and Silver Price Reduced In Chennai | ஈரான் போர் நேற்று (ஜூன் 15, 2026) முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்தது. இந்த நிலையில், இன்று தங்கம், வெள்ளி விலை சரிந்துள்ளது.

Gold Price : சரிந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jun 2026 10:40 AM IST

சென்னை, ஜுன் 16 : ஈரான் போர் (Iran War) நேற்று (June 15, 2026) முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) அதிரடி விலை உயர்வை சந்தித்தது. இந்த நிலையில்,  இன்று (ஜூன் 16, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்தித்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கத்தின் விலையை தீர்மானித்து வந்த ஈரான் போர்

ஈரான் போர் காரணமாக உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வந்தன. அந்த வகையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் பாதிப்புகளுக்கு உள்ளானது. உதாரணமாக ஈரான் போர் தீவிரமடையும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்தித்து, தங்கம் விலை சரிந்தது. இதுவே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் ஏற்படும்போது தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. இவ்வாறு மூன்று மாதங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது.

இதையும் படிங்க : பிஎஃப் கணக்கில் நாமினி இணைக்க வேண்டுமா?.. ஸ்மார்ட்போன் மூலம் சுலபமாக மேற்கொள்ளலாம்!

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.14,060-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.275-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us