AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் சீரான மின்சாரத்தை வழங்க கூடுதல் பியூஸ் ஆப் கால் மையங்கள் – மின்வாரியம் புதிய திட்டம்

சென்னை மேற்கு வட்டாரத்தில் புதிதாக 6 கூடுதல் ‘பியூஸ் ஆஃப் கால்’ மையங்களை அமைக்கவும், தற்போதுள்ள மையங்களுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதிய மையத்திற்கும் தலா 4 பணியாளர்கள், வாகனம் மற்றும் தேவையான தளவாடங்கள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் சீரான மின்சாரத்தை வழங்க கூடுதல் பியூஸ் ஆப் கால் மையங்கள்  – மின்வாரியம் புதிய திட்டம்
மாதிரி புகைப்படம்
Baskar P
Baskar P | Updated On: 16 Jun 2026 11:51 AM IST

சென்னை, ஜூன் 16 : சென்னையில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யவும், மின்தடை புகார்களுக்கு விரைந்து தீர்வு காணவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மேற்கு வட்டாரத்தில்புதிதாக 6 கூடுதல் ‘பியூஸ் ஆஃப் கால்’ மையங்களை அமைக்கவும், தற்போதுள்ள மையங்களுக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புதிய மையத்திற்கும் தலா 4 பணியாளர்கள், வாகனம் மற்றும் தேவையான தளவாடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சீரான மின்சாரத்தை வழங்க கூடுதல் பியூஸ் ஆப் கால் மையங்கள்

ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 19 மையங்களுக்கு, தலா 2 கூடுதல் பணியாளர்கள் வீதம் மொத்தம் 38 பேர் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்பட உள்ளனர். பருவமழைக் காலம் மற்றும் மின்தடை சவால்களை எதிர்கொள்ளும் வகையில், முதற்கட்டமாக 3 மாதங்களுக்கு இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மின் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பது மற்றும் நுகர்வோரின் புகார்களுக்கு மிகக் குறைந்த நேரத்தில் தீர்வு காண்பது உள்ளிட்ட நோக்கத்திற்காக இந்த செயல்முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மையங்களில் கூடுதலாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கான செலவு விவரம்:

  • அண்ணா நகர் பிரிவு: 8 பணியாளர்கள் (ரூ. 49,49,770)
  • அம்பத்தூர் பிரிவு: 7 பணியாளர்கள் (ரூ. 43,31,048)
  • ஆவடி பிரிவு: 4 பணியாளர்கள் (ரூ. 24,74,885)

ஒவ்வொரு மையத்திலும் ஒரு ஷிப்ட்டிற்கு 4 பணியாளர்கள் (லைன் இன்ஸ்பெக்டர், ஒயர்மேன், டெலிபோன் ஆபரேட்டர் மற்றும் உதவியாளர்) என 3 ஷிப்ட்டுகளுக்கும் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு பொதுப்பணித்துறை (PWD) விகிதாச்சாரப்படி தினசரி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு மையத்திற்கு ஒரு நாளைக்கு (3 ஷிப்ட்) ₹11,364 ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

90 நாட்களுக்கான ஊதியம் மற்றும் 18% ஜிஎஸ்டி (GST) உட்பட, ஒரு மையத்திற்கு சுமார் ₹12.06 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 6 புதிய மையங்களுக்கும் சேர்த்து ₹72,41,140.80 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பணியாளர்களை வழக்கமான K2 ஒப்பந்ததாரர்கள் மூலம் நியமிக்க வேண்டும் என்றும், இதற்கான பில்களை அந்தந்த செயற்பொறியாளர்கள் (Executive Engineers) முறையாகச் சரிபார்த்து வழங்க வேண்டும் என்றும் மேற்பார்வைப் பொறியாளர் (CEDC/WEST) உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த மையங்களுக்காக 3 மாத காலத்திற்கு வாகனங்களை வாடகைக்கு எடுப்பதற்கான முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Follow Us