AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : போர் நிறுத்தம் எதிரொலி.. ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்த தங்கம் விலை!

Gold and Silver Price Hiked In Chennai | மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளது.

Gold Price : போர் நிறுத்தம் எதிரொலி.. ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்த தங்கம் விலை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Jun 2026 11:07 AM IST

சென்னை, ஜூன் 15 : ஈரான் போர் (Iran War) முடிவுக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) அதிரடியாக உயர்ந்துள்ளது. மூன்று மாதங்களாக நீடித்து வந்த கடும் போர் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடி உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் கிராமுக்கு ரூ.210 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி கிராமுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஈரான் போர்

ஈரான் போர் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. குறிப்பாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரிக்கும்போதெல்லாம் கச்சா ஏண்ணெய் விலை உயரும். அப்போதெல்லாம் தங்கம் மற்றும் வெள்ளி விலை சரிவை சந்திக்கும். காரணம், கச்சா எண்ணெய் விலை உயரும்போது முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது இருந்து திரும்பும். இதுவே கச்சா எண்ணெய் விலை சரியும் பட்சத்தில் தங்கம் விலை உயரும். இவ்வாறு தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது.

இதையும் படிங்க : ரயிலில் பொதுப் பயணச் சீட்டுடன் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்க முடியுமா? விதி என்ன சொல்கிறது?

கடும் உயர்வை சந்தித்த தங்கம், வெள்ளி விலை

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,070-க்கும், சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.280-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : உங்கள் சம்பளம் ரூ. 15,000-ஆ? செலவு போக உங்களால் ஆயிரக்கணக்கில் சேமிக்க முடியும்!

ஈரான் போர் காரணமாக தங்கம் ஒரு நிலையற்ற தன்மை இல்லாமல் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், தற்போது போர் முடிவுக்கு வந்துள்ளதால் விலை உயர்வை சந்தித்துள்ளது.

Follow Us