நகை பிரியர்களுக்கு ஷாக்.. ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 2,160 அதிகரித்து விற்பனை..
தங்கத்தைத் தொடர்ந்து, வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்த நிலையில், இன்று மேலும் ரூ.10 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 6, 2026: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,280 உயர்ந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) மீண்டும் கணிசமான விலை உயர்வு பதிவாகியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.13,480க்கும், ஒரு சவரன் ரூ.1,07,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை:
இந்த நிலையில், இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.270 உயர்ந்து ரூ.13,750க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2,160 உயர்ந்து, முதன்முறையாக ரூ.1,10,000-ஐ எட்டியுள்ளது.
அதேபோல், 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் ரூ.15,000க்கும், ஒரு சவரன் ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் அறிவிப்பு.. என்னென்ன திட்டங்கள்?
தங்கத்தைத் தொடர்ந்து, வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்த நிலையில், இன்று மேலும் ரூ.10 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் மீது முதலீடு செய்யலாமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகின்றன. இதற்கு உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற நிலை, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ஈரான் தொடர்பான போர் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச காரணிகள் முக்கிய பங்காற்றி வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: 5 ஆண்டுகளில் 300% உயர்வை சந்தித்த தங்கம்.. சாதனை செய்த நிறுவனம்!
மேலும், 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும், நீண்டகால முதலீட்டை கருத்தில் கொள்பவர்களுக்கு தற்போதைய சூழல் சாதகமாக இருக்கலாம் என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.