AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நகை வாங்க இதுதான் சரியான டைம்.. தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை.. எவ்வளவு தெரியுமா ?

மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு கிராம் தங்கத்திற்கு 20 ரூபாய் குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,480 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 15 ஆயிரத்து 796 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 26 ஆயிரத்து 368 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நகை வாங்க இதுதான் சரியான டைம்.. தொடர் சரிவில் தங்கம், வெள்ளி விலை.. எவ்வளவு தெரியுமா ?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 04 Jun 2026 11:35 AM IST

தங்கம் விலை, ஜூன் 4, 2026: தங்கம் விலையில் கடந்த மூன்று நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த சூழலில், ஜூன் 4ஆம் தேதியான இன்று தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்திற்கு 20 ரூபாய் குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையில் கடந்த ஒரு வார காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் வெள்ளி 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலையைப் பொறுத்தவரையில், இந்த மாத தொடக்கத்திலிருந்து மூன்று நாட்கள் வரை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் தங்கம் 14,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மேலும் படிக்க: நகை கடன் வாங்கியுள்ளீர்களா?.. மோசடி நடந்தால் இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்.. முழு விவரம்!

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:

இந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு கிராம் தங்கத்திற்கு 20 ரூபாய் குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14,480 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 15 ஆயிரத்து 796 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 26 ஆயிரத்து 368 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில், கடந்த ஒரு வார காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சூழலில், ஜூன் 4ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் குறைந்து 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சரிவு – என்ன காரணம்?

தங்கம் விலை கடந்த மாத இறுதியிலிருந்து தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இது நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நிம்மதிப் பெருமூச்சை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், தங்கம் விலை சீராக குறைந்து வருவதால் பலரும் மீண்டும் தங்கம் வாங்கத் தொடங்கியுள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வரும் ஈரான் தொடர்பான பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், உலக முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் அதனை எதிர்நோக்கி வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் தொடர்பான பிரச்சினையில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டவுடன் அதன் தாக்கம் மீண்டும் தங்கத்தின் விலையிலும் எதிரொலிக்கக்கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தங்கம் விலை கடந்த சில நாட்களாக சரிவை கண்டு வருவதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Follow Us