AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மூன்று நாட்களாக மாற்றமின்றி நீடிக்கும் தங்கம், வெள்ளி விலை.. பொதுமக்கள் நிம்மதி

Gold Price: ஜூன் 3ஆம் தேதி நிலவரப்படி, 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,818-க்கும், ஒரு சவரன் ரூ.1,26,544-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

மூன்று நாட்களாக மாற்றமின்றி நீடிக்கும் தங்கம், வெள்ளி விலை.. பொதுமக்கள் நிம்மதி
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Jun 2026 11:24 AM IST

தங்கம் விலை, ஜூன் 3, 2026: தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 3ஆம் தேதியான இன்று, தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையைத் தொடர்ந்து, வெள்ளி விலையிலும் கடந்த ஒரு வாரமாக எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் விலை சரிய என்ன காரணம்?

ஈரான் போரால் நிலவி வரும் புவிசார் பதற்றங்கள் காரணமாக, தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: நகை கடன் வாங்கியுள்ளீர்களா?.. மோசடி நடந்தால் இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்.. முழு விவரம்!

இரண்டு மாதங்களாக நீடித்து வரும் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை உலக முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் எதிர்நோக்கி வருகின்றனர். போர் நிறுத்தம் குறித்த எதிர்பார்ப்பு காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில் சற்று நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தங்கத்தை விட 200 மடங்கு விலைமதிப்பு மிக்க உலோகம்.. கலிஃபோர்னியம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

ஆனால், இதுவரை எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படாத காரணத்தால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு எட்டப்படும் பட்சத்தில், அது தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:

ஜூன் 3ஆம் தேதி நிலவரப்படி, 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,818-க்கும், ஒரு சவரன் ரூ.1,26,544-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,500-க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,16,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையைப் பொருத்தவரையில், ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow Us