AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

4வது முறையாக விலை உயர்த்தும் மாருதி சுசூகி.. சாமானியர்களுக்கு ஷாக்!

Maruti Suzuki Hikes Prices Again | இந்தியாவில் சாமானிய மக்கள் வாங்கும் கார் நிறுவனமாக மாருதி சுசூகி உள்ளது. இந்த நிறுவனம் பட்ஜெட் ரக கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், அந்த நிறுவனம் நான்காவது முறையாக தனது கார்களின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

4வது முறையாக விலை உயர்த்தும் மாருதி சுசூகி.. சாமானியர்களுக்கு ஷாக்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Nov 2026 20:14 PM IST

இந்திய நடுத்தர குடும்பங்களின் மாபெரும் கனவாக இருப்பது இரண்டு விஷயங்கள் தான். ஒன்று தங்களுக்கென சொந்தமாக ஒரு வீடு, மற்றொன்று தங்களுக்கென சொந்தமாக ஒரு கார். இந்த இரண்டை தான் இலக்காக வைத்து இந்திய நடுத்தர குடும்பங்கள் பயணம் செய்யும். இவ்வாறு நடுத்தர குடும்பங்கள் தங்களது கனவை நிறைவேற்றும் விதமாக சில கார் நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் கார்களை (Budget Range Cars) விற்பனை செய்து வருகின்றன.

அத்தகைய பட்ஜெட் ரக கார்களை சாமானியர்களுக்கு வழங்கி வந்த மாருதி சுசூகி (Maruti Suzuki) நிறுவனம், தற்போது பயனர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது, அந்த நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் நான்காவது முறையாக தனது கார்களின் விலைகளை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

4வது முறையாக விலை உயர்த்தும் மாருதி சுசூகி

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளதுதான் மாருதி சுசூகி. இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் தான், அதிகரித்து வரும் உற்பத்தி விலைகளை சமாளிக்க முடியாமல் 4வது முறையாக தங்களது கார்களின் விலைகளை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : இரவு முழுவதும் சார்ஜ் செய்தால் போன் பேட்டரி வீணாகுமா?.. நிபுணர்கள் கூறுவது என்ன?

நவம்பர் 22 முதல் அமலுக்கு வரும் புதிய கட்டணம்

மாருதி சுசூகி நிறுவனம் தனது அனைத்து கார்களின் விலைகளையும் உயர்த்தாமல் குறிப்பிட்ட கார்களின் விலைகளை மட்டும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. மாருது சுசூகி நிறுவனம் பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, உற்பத்தி விலையை சமாளிக்க முக்கிய தயாரிப்புகளின் விலையை உயர்த்த வேண்டிய காட்டாயத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : நோட்டிபிகேஷன் ஆக்ஸஸ் மூலம் நடைபெறும் வங்கி மோசடிகள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

எந்த எந்த கார்கள் விலை உயர்த்தப்பட உள்ளன?

நிறுவனத்தில் செலவின குறைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வந்தாலும், குறிப்பிட்ட செலவின பங்கை விலை உயர்வு மூலம் சமாளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய உயர்த்தப்பட்ட கட்டணம் நவம்பர் 22, 2026 முதல் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ள நிலையில், எந்த எந்த கார்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து எந்தவித தகவல்களையும் வெளியிடாமல் உள்ளது.

Follow Us