AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.53 லட்சம்.. சிங்கப்பூர் அரசு அசத்தல் அறிவிப்பு!

Singapore Government Announced 53 Lakh For Childbirth | மக்கள் தொகையை அதிகரிக்க குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக சிங்கப்பூர் அரசு ஒரு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

குழந்தை பெற்றுக்கொண்டால் ரூ.53 லட்சம்.. சிங்கப்பூர் அரசு அசத்தல் அறிவிப்பு!
Singapore
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Aug 2026 09:03 AM IST

சிங்கப்பூர், ஆகஸ்ட் 27 : உலக நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை தற்போது இல்லை. அதாவது, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னதாக பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை சதவீதம் போதுமான அளவில் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையான மக்கள் தொகை சரிவை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், சிங்கப்பூரும் மிக கடுமையான பிறப்பு விகித சரிவை சந்தித்துள்ள நிலையில்  மக்கள் தொகையை அதிகரிக்க அந்த நாட்டு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவு

சிங்கப்பூரில் குழந்தை பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில் தான், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரித்து, மக்கள் தொகையை சீரான அளவில் வைத்திருக்க அந்த நாட்டு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. மக்கள் தொகையை பெருக்க அந்த நாட்டு பிரதமர் லாரன்ஸ் வாங்க் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அதாவது, இனி சிங்கப்பூரில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 17 வயது வரை பல்வேறு கட்டணங்களாக 70,000 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதாவது, இந்திய மதிப்பில் ரூ.53 லட்சம் ஆகும்.

இதையும் படிங்க : “279 உயிர்களை பலிகொண்ட கொடூரம்!” – இலங்கை ஈஸ்டர் சூசைட் பாம் தாக்குதல் வழக்கின் இறுதித் தீர்ப்பு செப்டம்பர் 22-ல் வெளியீடு!

குழந்தை பிறந்த உடன் கையில் ரூ.7 லட்சம்

இந்த திட்டத்தில், குழந்தை பிறந்த உடன் கை செலவுக்காக ரூ.7 லட்சம் வழங்கப்படும் என்றும், அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் பெற்றோரின் வங்கி கணக்கில் ரூ.1.25 லட்சம் வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, குழந்தை பராமரிப்பு செலவு குறைப்பு, பெற்றோர்களுக்கு கூடுதல் விடுமுறை, வீடு வாங்குவதற்கான சலுகைகள் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : இந்த வீடியோவில் இருப்பது அமைச்சர் இல்லை.. நான் தான்.. மலேசியாவை சேர்ந்த பெண் பரபரப்பு வீடியோ!

Follow Us