AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கூட்டத்தில் புகுந்த கார்.. அலறிய மக்கள்.. லிவர்பூல் கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஷாக்!

Liverpool Celebration Crash : லிவர்பூலில் பிரீமியர் லீக் வெற்றியைக் கொண்டாடும் அணிவகுப்பில், ஒரு கார் வேண்டுமென்றே கூட்டத்திற்குள் மோதியதில் 27 பேர் படுகாயமடைந்தனர். 53 வயதான ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் மேலும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்

கூட்டத்தில் புகுந்த கார்.. அலறிய மக்கள்.. லிவர்பூல் கால்பந்து வெற்றி கொண்டாட்டத்தில் ஷாக்!
லிவர்பூலில் விபத்து ஏற்பட்ட இடம்
C Murugadoss
C Murugadoss | Published: 27 May 2025 08:37 AM IST

பிரிட்டிஷ் நகரமான லிவர்பூலில், பிரீமியர் லீக்கில் லிவர்பூல் கால்பந்து கிளப்பின் வெற்றியைக் கொண்டாட ரசிகர்கள் வெற்றி அணிவகுப்பை நடத்திக் கொண்டிருந்த போது ஒரு நபர் காரை வேகமாக ஓட்டி வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தினார். இந்த விபத்தில் 27 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். லிவர்பூல் காவல்துறையினரின் தகவலின்படி, கால்பந்து அணியின் வெற்றியைக் கொண்டாடும் கூட்டத்திற்குள் தனது காரை ஓட்டிச் சென்றதற்காக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்

கைதான நபர்

53 வயதான பிரிட்டிஷ் நபர் ஒருவர் லிவர்பூல் கால்பந்து ரசிகர்கள் கூட்டத்தில் தனது மினிவேனை மோதியதற்காக கைது செய்யப்பட்டார். அணியின் பிரீமியர் லீக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எத்தனை பேர், காயமடைந்த விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 27 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

பிரதமர் கீர் ஸ்டார்மர் வருத்தம்


இந்த விஷயத்தில், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வருத்தம் தெரிவித்ததோடு, நிலைமை குறித்து கேட்டறிந்து வருவதாகவும் கூறினார். காவல்துறையினரின் விரைவான நடவடிக்கைக்கு அவர் நன்றி தெரிவித்தார். லிவர்பூலில் நடந்த காட்சிகள் பயங்கரமானவை என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்

லிவர்பூல் கால்பந்து கிளப் என்ன சொன்னது?

இந்த சம்பவத்திற்குப் பிறகு, லிவர்பூல் கால்பந்து கிளப் ஒரு அறிக்கையை வெளியிட்டது, வாட்டர் ஸ்ட்ரீட்டில் நடந்த சம்பவம் தொடர்பாக மெர்சிசைட் காவல்துறையுடன் நாங்கள் நேரடி தொடர்பில் உள்ளோம், இந்த கடுமையான சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்கள் பிரார்த்தனையும். இந்த சம்பவத்தை கையாளும் அவசர சேவைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு நாங்கள் தொடர்ந்து எங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

வீடியோ

நேரில் பார்த்தவரின் ஷாக்

அணிவகுப்புக்காக ஐல் ஆஃப் மேன் நகரிலிருந்து பயணித்த பீட்டர் ஜோன்ஸ் இந்த விபத்து குறித்து பேசியுள்ளார். இது குறித்து தெரிவித்த அவர், கூட்டத்திற்குள் கார் செல்லும் சத்தத்தைக் கேட்டேன். பின்னர் குறைந்தது 6 அல்லது 7 பேர் பேர் சாலையில் விழுவதை பார்த்தேன். முன்னால் ஒரு பெரிய சத்தம் கேட்டது. என்னையும் என் நண்பரையும் ஒரு கார் வேகமாக கடந்து சென்றதாகவும், மக்கள் அதைத் துரத்திச் சென்று தடுக்க முயன்றனர் என்றார்

Follow Us