குவைத் விமான நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல்.. இந்தியர் பலி!
Iran Attacked Kuwait International Airport | மேற்கு ஆசியா போரின் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியர் பலியாகியுள்ளார்.
குவைத் சிட்டி, ஜூன் 03 : குவைத் (Kuwait) விமான நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதில், இந்தியர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் (America and Iran) இடையே மீண்டும் தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில், இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், ஈரான் தாக்குதலில் இந்தியர் பலியான சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
குவைத் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய ஈரான்
2026, பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானுக்கு தாக்குதல் நடத்திய நிலையில், மேற்கு ஆசியா போர் வெடித்தது. இந்த போரின் ஒரு பகுதியாக ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. ஈரான் ஹோர்முஸை திறந்தால் மட்டுமே இந்த சிக்கல் சரிசெய்யப்படும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதையும் படிங்க : 80 ஏவுதளங்கள்.. சீனா பாலைவனத்தில் தயாராகும் ஒரு அணு ஆயுதக் கோட்டை.. என்னென்ன இருக்கு?




மீண்டும் ஈரான் – அமெரிக்கா இடையே மோதல்
அமைதி பேச்சுவார்த்தை காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதியான சூழல் நிலவி வந்த நிலையில், பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் இரு நாடுகளும் மீண்டும் சண்டையிட தொடங்கியுள்ளன. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை தாக்கியது.
இதையும் படிங்க : உலகின் மிகப்பெரிய டைனோசர் எது? – புதைபடிவங்கள் சொல்வது என்ன?
அதனை தொடர்ந்து இன்று அதிகாலை குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் பலியான நபர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து குவைத் சர்வதேச விமான நிலையத்தில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.