ஹோர்முஸ் நீரிணை மூடப்படும்.. ஈரான் திட்டவட்ட அறிவிப்பு.. மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த பதற்றம்!
Iran Again Announced The Closing Of Strait Of Hormuz | ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இது மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
தெஹ்ரான், ஜூலை 12 : ஹோர்முஸ் நீரிணையில் (Strait Of Hormuz) எந்த கப்பலுக்கும் அனுமதி இல்லை என ஈரான் அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் (Iran) மற்றும் அமெரிக்கா (America) இடையே சில நாட்கள் அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இதன் காரணமாக தான், ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் அறிவித்துள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் வெடித்த போர்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சில மாதங்கள் நீடித்து வந்த போர், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடன்பாடு எட்டிய அமைதி பேச்சுவார்த்தையின் காரணமாக சில நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறி, அமைதி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) அறிவித்தார்.
இதையும் படிங்க : ஆஸ்திரேலிய ஊடகங்களில் பிரதமர் மோடி பயணம் முக்கிய இடம்; வர்த்தகம், பாதுகாப்பு, ஆற்றல் துறைகளில் புதிய ஒப்பந்தங்கள்




இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் ஈரான் மீது மிக கடுமையான தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லக்கூடிய அனைத்து கப்பல்பகளும் ஈரான் அறிவித்த கடல் வழியிலேயே பயணம் செய்ய வேண்டும். அப்படி இல்லை எனில் அந்த கப்பல்களின் பதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படாது என கூறப்பட்டு இருந்தது. இது உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் – ஈரான் திட்டவட்டம்
இந்த நிலையில் தான் தற்போது ஈரான் மீண்டும் ஒரு பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, அடுத்த உத்தரவு வரும் வரை ஹோர்முஸ் நீரிணை மூடப்படும். மேற்கு ஆசியா பகுதியில் அமெரிக்காவின் தலையீடு நிறுத்தப்படும் வரை நீரிணை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். எந்த கப்பல்களுக்கும் இந்த வழியே கடந்து செல்ல அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : 30 வருஷ பழசு.. திடீரென விமானத்தை மாற்றிய அமெரிக்க அதிபர்.. என்ன காரணம்?
ஈரானின் இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.