Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India’s National Language: இந்தியாவின் தேசிய மொழி இதுதான்.. சுவாரஸ்ய பதில் கொடுத்து கைதட்டலை அள்ளிய கனிமொழி!

DMK MP Kanimozhi Karunanidhi: திமுக எம்பி கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு ஸ்பெயினில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சங்கத்தை சந்தித்தது. "வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி" என கனிமொழியின் பதில் வைரலானது. இந்தக் குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் இந்தியாவின் முன்னாள் துணைத் தூதர் இடம் பெற்றனர்.

India’s National Language: இந்தியாவின் தேசிய மொழி இதுதான்.. சுவாரஸ்ய பதில் கொடுத்து கைதட்டலை அள்ளிய கனிமொழி!
திமுக எம்பி கனிமொழிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 02 Jun 2025 18:14 PM

ஸ்பெயின், ஜூன் 2: கடந்த 1981ம் ஆண்டு பயங்கரவாத காட்டுமிராண்டித்தனத்தால் பாதிக்கப்பட்டவர்களை ஆதரிப்பதற்காக (Indian delegation interacts)
ஸ்பெயினில் நிறுவப்பட்ட பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்துடன் திமுக எம்பி கனிமொழி கருணாநிதி (DMK MP Kanimozhi Karunanidhi) தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழு இன்று அதாவது 2025 ஜூன் 2ம் தேதி கலந்துரையாடியது. 26 உயிர்களை கொடூரமாக கொன்ற பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 33 உலக தலைநகரங்களுக்கு செல்ல நியமிக்கப்பட்ட 7 பல கட்சி குழுக்களில் இந்த குழுவும் ஒன்றாகும். இந்த கலந்துரையாடலின்போது திமுக எம்பி கனிமொழியிடம் ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் சுவாரஸ்யமான பதிலை கொடுத்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

என்ன கேள்வி அது..?

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்துடன் கலந்துரையாடியபோது திமுக எம்பி கனிமொழி கருணாநிதியிடம் ஒருவர், ’இந்தியாவின் தேசிய மொழி எது..? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கனிமொழி, “வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் தேசிய மொழி” என்று தெரிவித்தார். அப்போது, அங்கிருந்த அனைவரும் கைகட்டல்களை அள்ளி வீசினார். தொடர்ந்து எக்ஸ் பதிவில் கனிமொழி, “நேற்று ஸ்பெயினில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவின் ஈடுபாடுகளின் ஒரு பகுதியாக அரவணைப்பு மற்றும் அன்பால் நிறைந்த தமிழ் சமூகத்தை சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். வீட்டிலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் பல இந்தியர்களுடன் இணைவது மிகவும் அருமையாக இருந்தது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த குழுவில் யார் யார் இடம்பெற்றுள்ளார்கள்..?

கனிமொழி கருணாநிதியை தவிர, சவாஜ்வாதி கட்சி எம்பி ராஜீவ் ராய், பாஜக எம்பி பிரிஜேஷ் சௌதா, ஆர்ஜேடி எம்பி பிரேம் சந்த் குப்தா, ஆம் ஆத்மி எம்பி அசோக் குமார் மிட்டல் மற்றும் ஐநாவுக்கான இந்தியாவின் முன்னாள் துணை தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய தூதரகத்தின் எக்ஸ் பதிவு:

ஸ்பெயினில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட 4,800க்கும் மேற்பட்டவர்களுடன் இணைந்து செயல்படும் அசோசியாசியன் டி விக்டிமாஸ் டெல் டெரரிசோ என்ற அமைப்பால் நடத்தப்பட்ட இந்த அனைத்து கட்சி நாடாளுமன்றக் குழு, பயங்கரவாதத்தால் பிறந்த வலி மற்றும் மீள்தன்மை குறித்து இதயப்பூர்வமான பரிமாற்றத்தை நடத்தியது.

எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் இந்தியாவின் அனுபவத்தை பிரதிநிதிகள் பகிர்ந்து கொண்டனர். பாதுகாப்பான, இரக்கமுள்ள உலகத்தை உருவாக்குவதற்கான பகிரப்பட்ட தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்” என்று குறிப்பிட்டு இருந்தது.