பெருவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. 6.0 ரிக்டராக பதிவு!
6.0 Strongest Earthquake Strike Peru | பெருவில் இன்று (டிசம்பர் 28, 2025) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
லிமா, டிசம்பர் 28 : பெரு (Peru) நாட்டில் இன்று (டிசம்பர் 28, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் (Earthquake) ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி காலை சரியாக 8.21 மணி அளவில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் (NCS – National Center For Seismology) தெரிவித்துள்ளது. பெருவை தாக்கிய இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பெருவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பெருவில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் 67 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளது. இது 8.93 டிகிரி தெற்கு அட்ச ரேகையிலும், 78.90 டிகிரி மேற்கு தீர்க ரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பெரியதாக இருந்தாலும், இதனால் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த தகவல்கள் வெளி வராமல் உள்ளன.
இதையும் படிங்க : அரசுப் பள்ளிகளில் தினமும் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்.. அதிரடி உத்தரவு எங்கு தெரியுமா?
பெருவில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் நிலநடுக்கம்
EQ of M: 6.0, On: 28/12/2025 08:21:51 IST, Lat: 8.93 S, Long: 78.90 W, Depth: 67 Km, Location: South Pacific Ocean.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/066W4LWEd8— National Center for Seismology (@NCS_Earthquake) December 28, 2025
உள்ளூர் நேரப்படி இந்த நிலநடுக்கம் இரவு சரியாக 9.51 மணிக்கு அங்குள்ள அன்காஷ் பிராந்தியத்தில் உள்ள சிம்போட் என்ற நகருக்கு அருகில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் கடுமையாக குலுங்கிய நிலையில், பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : வெளிநாட்டு போதைப்பொருள்.. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரரை தேடும் போலீஸ்.. நடந்தது என்ன?
இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாதது அந்த பகுதி மக்களிடையே சற்று ஆறுதலை வழங்கியுள்ளது.