அமெரிக்கா எண்ணெய் கப்பல்களுக்குத் தடை விதித்துள்ள வெனிசுலாவில் ஏற்பட்ட பதற்றங்கள் காரணமாகவும், அடுத்த ஆண்டு அமெரிக்காவில் மேலும் வட்டி விகிதக் குறைப்புகள் இருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளாலும், தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,500 டாலருக்கும் மேலாக உயர்ந்துள்ளது. அதன்படி,கடந்த மூன்று நாளாக தங்கத்தின் விலை அறை சதவீத்திற்கும் மேலாக உயர்ந்து, வளர்ச்சியடைவது தொடர்கிறது. இதனால், தங்கத்தின் விலை 1979ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகச்சிறந்த வருடாந்திர வளர்ச்சியை நோக்கி செல்கிறது.