சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஒரு மருத்துவர், நோயாளி ஒருவரை கொடூரமாக தாக்கியதற்காக பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த நோயாளியை மரியாதை குறைவாக அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, “கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள்” என அவர் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மருத்துவர், 36 வயதான அர்ஜுன் பண்வார் என்ற நோயாளியை கடுமையாக தாக்கியுள்ளார்.