நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்கள்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்.. பைலட் பலி!
Two Helicopters Collide In America | அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி கடும் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், அது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
வாஷிங்டன், டிசம்பர் 29 : அமெரிக்காவின் (America) நியூஜெர்சி (New Jersey) மாகாணத்தில் உள்ள ஹாமண்டன் விமான நிலையத்திற்கு அருகே ஹெலிகாப்டர்கள் (Helicopter) பறந்துக்கொண்டு இருந்தன. அப்போது இரண்டு ஹெலிகாப்டர்கள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது கடும் விபத்துக்குள்ளான அந்த இரண்டு விமானங்களும் தரையில் விழுந்து தீப்பற்றி எரிய தொடங்கிய நிலையில், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்கள் – பைலட் பலி
இரண்டு ஹெலிகாப்டர்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு ஹெலிகாப்டரின் பைலட் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பைலட் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், விமான போக்குவரத்து ஆணையம் விசாரணையை கையில் எடுத்துள்ளது.




இதையும் படிங்க : கேன்சரை சரி செய்யுமா? ஜப்பானிய தவளையின் வயிற்றில் ஒரு அதிசயம்.. விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி சொல்வதென்ன?
இணையத்தில் வைரலாகும் வீடியோ
#WATCH : First image from the crash site show the wreckage of one helicopter involved in the accident in Hammonton. Officials are yet to release further details.#Hammonton #NewJersey #HelicopterCrash #Crash #Helicopter #Aviation #USA #UnitedStates pic.twitter.com/dDnpsaqH5d
— upuknews (@upuknews1) December 28, 2025
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் நடுவானில் விபத்துக்குள்ளான அந்த இரண்டு ஹெலிகாப்டர்களில் ஒரு ஹெலிகாப்டர் சுழன்றுக்கொண்டே வானத்தில் இருந்து கீழே விழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க : சிரியா மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு.. 8 பேர் பலியான நிலையில், 20 பேர் படுகாயம்!
இரண்டு விமானங்களும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான நிலையில், விமானம் விழுந்து எரிந்தபோது மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகள் தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.