குஜராத் மாநிலம் சூரத்தில் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதாவது, கிறிஸ்துமஸ் தினத்தன்று குஜராத்தின் சூரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், பத்தாவது மாடியில் இருந்து ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார். ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக எட்டாவது மாடியில் உள்ள ஜன்னலின் கிரில் கேட்டில் சிக்கி, அதிசயமாக உயிர் பிழைத்தார்.