அதிக சத்தத்துடன் பாடல் கேட்டதால் ஆத்திரம்.. பக்கத்து வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரஷ்ய பெண்!
Woman Open Gun Fire At Neighbour House | ரஷ்யாவில் தனது பக்கத்து வீட்டுக்காரர் அதிக சத்தத்துடன் இரவில் பாடல் கேட்ட நிலையில், ஆத்திரமடைந்த பெண் அந்த நபரின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாஸ்கோ, டிசம்பர் 29 : ரஷ்யாவில் (Russia) தனது பக்கத்து வீட்டுக்காரர் அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட நிலையில், அவரை எச்சரிக்க பெண் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரகாகி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யா பெண் தனது பக்கத்து வீட்டுக்காரரை துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் – பெண் அதிரடி
ரஷ்யாவில் பெண் ஒருவரின் பக்கத்து வீட்டுக்காரர் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டுக்கொண்டு இருந்துள்ளார். இரவு நேரத்தில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட வேண்டாம் என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் அந்த பெண் பலமுறை கூறியுள்ளார். ஆனாலும் அந்த நபர் தொடர்ந்து அதிக சத்தத்துடன் பாடல் கேட்டு வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அந்த பெண், வீட்டில் இருந்த ஏகே 47 ரக துப்பாக்கியை எடுத்து வந்த தனது ஜன்னலில் இருந்து பக்கத்து வீட்டை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இதையும் படிங்க : சிரியா மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு.. 8 பேர் பலியான நிலையில், 20 பேர் படுகாயம்!
இணையத்தில் வைரலாகும் வீடியோ
A Russian woman was complained about by her neighbors for playing loud music at night.
After drinking alcohol at night, she fired shots at their windows!!! pic.twitter.com/mDMNorTY8Q— NOVA (@NOVA360X) December 26, 2025
பெண் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் யாருக்கேனும் காயம் அல்லது உயிரிழப்புகள் ஏதேனும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரியாமல் உள்ளது. இருப்பினும் அந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : உலகின் மிக உயரமான துபாய் புர்ஜ் கலீஃபா கட்டடம்…யாருக்கு சொந்தமானது!
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் மது போதையில் இருக்கும் அந்த பெண் தனது வீட்டு ஜன்னலில் இருந்து பக்கத்து வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்துகிறார். அதனை அந்த பெண்ணின் வீட்டில் இருந்து யாரோ வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாக உள்ளது.