சல்மான்கான் தனது 60வது பிறந்தநாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடினார். ஆனால் அந்த நிகழ்விலிருந்து வெளியான ஒரு புகைப்படம் மட்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட அந்த வைரல் புகைப்படத்தில், பான்வெல் பண்ணை இல்லத்தில் சல்மான் கான், முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி, தெலுங்கு சினிமா நட்சத்திரம் ராம் சரண் மற்றும் நடிகர் பாபி தியோல் ஆகியோருடன் ஆழ்ந்த உரையாடலில் ஈடுபட்டிருப்பது காணப்படுகிறது.