ஆண்டு தொடக்கம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தனது இரண்டாவது சாம்பியன்ஸ் டிரோபி பட்டத்தை வென்றதுடன் ஆரம்பமானது. இதன் மூலம் மகேந்திர சிங் தோனிக்குப் பிறகு பல ஐசிசி பட்டங்களை வென்ற ஒரே இந்திய அணித் தலைவர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். ஆண்டின் முடிவில், சொந்த மண்ணில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை அதிர்ச்சி அளிக்கும் வகையில் வீழ்த்தி, இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து, தனது முதல் ஐசிசி கோப்பையை கைப்பற்றியது.