Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏலியன் வருகை முதல்… உலகப்போர் வரை…. 2026ல் காத்திருக்கும் ஆபத்துகள் – பாபா வங்காவின் கணிப்பு

Baba Vanga 2026 Forecast : உலக அளவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை முன் கூட்டியே கணித்து சொல்லும் பாபா வங்கா 2026 ஆம் ஆண்டு நடப்பவை குறித்து பேசியிருக்கிறார். அதன் படி ஏலியன் வருகை, ஏஐ பாதிப்புகள் வரை கணித்து சொல்லியிருக்கிறார்.

ஏலியன் வருகை முதல்… உலகப்போர் வரை…. 2026ல் காத்திருக்கும் ஆபத்துகள் – பாபா வங்காவின் கணிப்பு
பாபா வங்காவின் கணிப்புகள்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Aug 2025 19:24 PM

உலகம் முழுவதும் நடப்பவற்றை முன் கூட்டியே அறிவிப்பதில் பிரபலமானவர்  பாபா வங்கா. இவர் அறிவித்த இயற்கை பேரிடர்கள், விபத்துகள் என பெரும்பாலானவை நடந்திருப்பதால், உலக மக்கள் இவர் கணித்து சொல்லும் விஷயங்களுக்கு அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இந்த நிலையில் அவர் வருகிற 2026 ஆம் ஆண்டு நடப்பவை பற்றி கணித்து சொல்லியிருக்கிறார். அவரது கூற்றுப்படி 2026 ஆம் ஆண்டு உலக அளவில் இயற்கை பேரிடர்கள், செயற்கை நுண்றிவினால் ஏற்படும் பாதிப்புகள், உலகப் போர், எரிமலை வெடிப்புகள் (Volcono Erupts) இவற்றுக்கெல்லாம் கூடுதலாக ஏலியனின் வருகை இதெல்லாம் பூமியை பாதிக்கும் என தெரிவித்திருக்கிறார். இது உலக மக்களிடையே கவலையை  ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பேசியிருப்பது குறித்து விரிவா பார்க்கலாம்.

இயற்கை பேரழிவுகள் பற்றிய முன்னறிவிப்பு

பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டு குறித்து கணித்து சொல்லியதில் மிகவும் முக்கியமானது அதிக இயற்கை பேரழிவுகள் நடக்கும் என்பது தான். குறிப்பாக  உலக அளவில் பெரும் நிலநடுக்கங்கள், சக்திவாய்ந்த எரிமலை வெடிப்புகள், மேலும் கடுமையான காலநிலை மாற்றங்கள் ஆகியற்றை பூமி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார். இது மனித வாழ்வு, கட்டமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் மீது பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் உலகில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் வெப்ப அலைகளின் தாக்கம், காட்டுத் தீ பரவல், நிலநடுக்கம் ஆகியவை இவர் கணிப்பின் படி நடந்திருக்கின்றன. இதனால் வங்கா கூறியது படி 2026 ஆம் ஆண்டு மோசமான ஆண்டாக அமையலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

இதையும் படிக்க : இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 29 பேர் காயம்!

உலகப் போரின் அபாயம்

இதில் மிக கவலையை ஏற்படுத்தும் பாபா வங்காவின் கணிப்பாக பார்க்கப்படுவது மூன்றாம் உலகப் போரின் அபாயம் தான். தற்போது அவ்வப்போது நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் மோதல், ரஷ்யா – உக்ரைன் போர், சீனா-  இந்தியாவிடையே அடிக்கடி நிகழும் சலசலப்புகள் ஆகியவை பாபா வங்காவின் கூற்றின் நம்பகத்தன்மையை அதிகரிக்கின்றன. இது உலகின் இடையே பெரும் போராக வெடிப்பதற்கான முக்கிய காரணங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதையும் படிக்க : இறந்த செல்லப்பிராணிகளுடன் பேச வேண்டுமா?.. அப்போ இவ்வளவு தொகை செலுத்துங்கள்.. சீனாவில் புதிய வகை மோசடி!

செயற்கை நுண்றிவின் ஆதிக்கமும், ஏலியனுடனான தொடர்பும்

செயற்கை நுண்ணறிவு தற்போது மக்களின் வேலைகளை எளிமைப்படுத்துவதைத் தாண்டி, பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் உள்ளது. இதனால் வேலை பறிபோகும் சூழல், நெறிமுறை சிக்கல்கள்,  ஏஐ மனித கட்டுப்பாட்டை மீறி செயல்படுவது போன்றவை நடக்கலாம் என நம்ப்பப்படுகிறது. குறிப்பாக வேற்று கிரக வாசிகளான ஏலியனுடனான தொடர்பு வருகிற 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்படலாம் என நம்பப்படுகிறது. மேலும் ஒரு ஏலியன் ஷிப் ஒன்று பூமியின் வளிமண்டலத்தில் நுழையலாம் என அவர் தெரிவித்திருக்கிறார்.  பாபா வங்கா முன்னர் அறிவித்த 2004 ஆம் ஆண்டு சுனாமி, 9//11 தாக்குதல் ஆகியவை நடந்திருக்கின்றன. இதனால் மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது