AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிக்னல் கோளாறு இல்லாமல் போன் பேசலாம்.. இந்த ஒரு ஆப்ஷனை ஆன் செய்தால் போதும்!

Phone Calls Without Network Issue | போன்கால் பேசும்போது பெரும்பாலான நபர்கள் சந்திப்பது சிக்னல் கோளாறை தான். இந்த நிலையில், ஸ்மார்ட்போனில் ஒரு ஆப்ஷனை ஆன் செய்யும் பட்சத்தில் எந்த வித சிக்னல் கோளாறும் இல்லாமல் உங்களால் போன் கால் பேச முடியும்.

சிக்னல் கோளாறு இல்லாமல் போன் பேசலாம்.. இந்த ஒரு ஆப்ஷனை ஆன் செய்தால் போதும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 06 Feb 2026 16:19 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரது வாழ்விலும் ஸ்மார்ட்போன் (Smartphone) முக்கிய அங்கமாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் இல்லை என்றால் பல வேலைகளை செய்ய முடியாத சூழல் தான் உள்ளது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் போன்கால் பேசாமால் யாராலும் இருக்க முடியாது. அவசர தேவை, தகவல் பரிமாற்றம், உறவுகளுடன் பேசுவது ஆகியவற்றுக்கு போன்கால்கள் மிகவும் அவசியமானதாக உள்ளது. இந்த நிலையில், பெரும்பலான நபர்கள் சந்திப்பது சிக்னல் பிரச்னை தான். முக்கியமான நேரத்தில் போன்கால் பேச சிக்னல் கிடைக்காவிட்டால் சிக்கலாகிவிடும். இந்த நிலையில், சிக்னல் கோளாறு இல்லாமல் போன்கால் பேசுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

போன் கால்கள் பேசும்போது தொல்லை கொடுக்கும் சிக்னல் கோளாறு

வீட்டிற்குள் இருந்து போன் பேசுவது, பேஸ்மெண்ட் அல்லது வீட்டின் அறைகளில் இருந்து போன் பேசும்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் சந்திப்பது சிக்னல் கோளாறை தான். இந்த நிலையில், சீரான சிக்னல் இருக்கும் இடத்தை தேடி அலைவது உண்டு. இன்னும் சிலர் ஜன்னல் அல்லது கதவு இருக்கும் பகுதிக்கு சென்று தான் போன் கால் பேசுவர். இத்தகைய சிக்கல்கள் இல்லாமல் சிக்னல் கோளாறும் இல்லாமல் போன் பேச முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா. உண்மை தான், அது எப்படி என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : ஆப்பிள் காதலர் சிறப்பு சலுகை.. ஐபோன்கள், மேக் மற்றும் டேப்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

ஸ்மார்ட்போனில் இந்த ஒரு ஆப்ஷனை மட்டும் ஆன் செய்தால் போதும்

ஸ்மார்ட்போனில் சிக்னல் கோளாறு இல்லாமல் போன் பேசுவதற்கான வழி உள்ளது. அதற்கு உங்கள் ஸ்மார்ட்போனில் ஒரு ஆப்ஷனை மட்டும் ஆன் செய்வது போதுமானதாக இருக்கும். ஸ்மார்ட்போன்களில் வைஃபை காலிங் (Wi – Fi Calling) என்ற ஒரு வசதி உள்ளது. அதனை ஆன் செய்யும் பட்சத்தில் உங்களால் சின்கல் கோளாறு இல்லாமல் போன் பேச முடியும்.

இதையும் படிங்க : பிப்ரவரியில் அறிமுகமாக வரிசைக் கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!

பொதுவாக போன் பேச வேண்டும் என்றால் உங்களது ஸ்மார்ட்போன் டவர்களில் இருந்து சிக்னலை பெறும். சில சமயங்களில் சிக்னல் சீராக இல்லை என்றால் போன் பேசும்போது சிரமங்களை சந்திக்க நேரிடும். இந்த சூழல்களின்போது தான் இந்த வைஃபை காலிங் அம்சம் உதவியாக இருக்கும். இந்த அம்சத்தை பயன்படுத்தி போன் கால் செய்யும்போது உங்கள் ஸ்மார்ட்போன் நெட்வொர்க்குக்கு பதிலாக  வைஃபையை பயன்படுத்தும். இதன் மூலம் நீங்கள் தடையில்லாமல் போன் கால்களை பேச முடியும்.

Follow Us